ஓய்வாக இருக்கும் சமயம் துவரம் பருப்பு, தனியா, வெந்தயம், மிளகாய்வற்றல் ஆகியவைகளை லேசாக் வறுத்து பொடி செய்துகொள்ள வேண்டும். எப்பொழுதெல்லாம் மோர் மீந்துப்போகிறதோ அப்போதெல்லாம் மோரில் கடுகு தாளித்து இந்த பொடியை போட்டு லேசாக சுடவைத்தால் மோர் ரசம் தயாரகிவிடும். இதனை சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.