உலகத்தில் மஞ்சள் சாகுபடி பரப்பில் இந்தியாவுக்கு 5வது இடமாக இருந்தாலும், உற்பத்தியில் 2 வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் தரத்தில் இந்திய மஞ்சளுக்கு தான் முதலிடம். அதிலும் தமிழகத்தில் ஆத்தூர், நாமகிரிப்பேட்டை, ஈரோடு பகுதிகளில் விளையும் மஞ்சள்தான் முதல் தரமானவை.
சுமார் 1000 வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் மஞ்சள் பயன்பாடு தொடங்கி விட்டது. இது குறித்து சீன பயணி மார்க்க போலோ தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். மஞ்சள் என்று தமிழகத்திலும், கேரளத்தில் மட்டுமே அழைக்கப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்களில் ஹால்டி என்று ஹிந்தி மொழியில் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் விரலி, உருண்டை ரகம் அதிகம் விளைகிறது. 100 கிராம் மஞ்சளில் புரோட்டின் 8.6 கிராம், கொழுப்பு 8.9 கிராம், கார்போஹைட்ரேட் 63.0 கிராம், கால்சியம் 0.2 கிராம், இரும்பு 0.01, வைட்டமின் ஏ, பி, பி2, சி ஆகியவை 0.09., 0.09., 0.09., 49.8 மி.கி, பொட்டாசியம் 175, கலோரி 390 உள்ளது.
இந்திய அளவில் பெரிய மஞ்சள் மார்க் கெட்டான ஆந்திரா மாநிலம் நிஜாமாபாத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல் மஞ்சள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இங்கு விற்பனைக்கு வரும் மஞ்சள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மருந்து, ரசாயனம், அழகுசாதனபொருட்கள், பெயின்ட்நிறம், நறுமணஎண்ணெய் ஆகியவற்றுக்கு இந்திய மஞ்சள் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.
நன்றி
தமிழ் முரசு