மாங்கனி சாகுபடியில் பெயர் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிரானைட், குவாரி மற்றும் விவசாயமும் பிரதான தொழிலாக உள்ளது. கிருஷ்ணகிரி தற்போது ப்ரூட் ஜாம் தயாரிப்பிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. மாங்கூழ் தயாரிக்கும் ஆலைகளிலேயே ப்ரூட் ஜாமும் தயாரிக்கப்படுகிறது.
மா சீசன் இல்லாத நாட்களிலும், சில தொழிற்சாலைகள் ஆண்டு முழுவதும் ஜாம் தயாரிப்பில் இறங்கியுள்ளது. பிரபல ஜாம் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆர்டர் கொடுக்கின்றன. ஜாம் தயாரிக்க தேவையான பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்குகின்றன.
அவற்றை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாங்கூழ் தயாரிப்பு தொழிற்சாலைகள் பெற்று ஜாமாக்கி அந்த ஆலைகளில் கொய்யா கூழ் தயாரிக்கப்படுகிறது. ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து கொய்யா பழங்கள் வாங்கி வரப்பட்டு பதப்படுத்தி மேம்படுத்தப்பட்ட கூழாக மாற்றி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மாங்கூழைப் போலவே கொய்யா கூழும் தயாரித்து டின்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
– நன்றி
தமிழ் முரசு –