பருவமழைகள் பெய்யவும், நிலப்பரப்பில் தட்பவெப்ப நிலையைச் சீராகக் காக்கவும் காடுகள் உதவுகின்றன. காடுகள் மண் அரிப்பைத் தடுப்பது மட்டுமல்லாமல் வெள்ளச் சேதம் ஏற்படா வண்ணம் கட்டுப்படுத்துகிறது. காட்டிலுள்ள மரங்களின் பரந்த ஆழமான வேர்கள் மண்ணைக் கெட்டியாகப் பிணைத்துக் கொள்வதாலும், காடுகளின் மேற்பரப்பானது மக்கிய இலைகள் போன்றவற்றால் வேகமான நீரை உறிஞ்சக்கூடிய திறன் பெற்றிருப்பதாலும் மண் அரிப்பைக் குறைக்கிறது.
மரங்களை பண்ணைகளைச் சுற்றிக் காற்றுத் தடையாகப் பயிரிட்டால் அவை காற்றின் வேகத்தையும், வெப்பத்தையும் தணித்துப் பயிர் செழித்து வளர அவை உதவுகின்றன. காடுகள் பெருகியிருந்தால் மழைக்காலத்தில் வெள்ளத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், அதிகமான வண்டல் மண்ணை அடித்துக் கொண்டு வந்து அணை, குளங்களின் கொள்திறன் குறைவது தவிர்க்கப்படுகின்றது. தற்போது நம் நாட்டில் செயற்கை உரத்தின் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. காடுகள் பெருமளவில் நிலங்களுக்கு வேண்டிய பசுந்தாள் உரங்களைத் தருகின்றன; கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாகவும் பயன்படுகின்றன.
Good Details. Thanks.