- மனிதனும் பிற உயிரினங்களும் வெளியேற்றும் நச்சுக் காற்றாகிய கரியமில வாயுவை உறிஞ்சி, ஆக்ஸிஜனைக் கொடுத்து மனித இனத்தையும் மற்ற உயிர்களையும் காத்து வருபவை மரங்களே. ஒரு சாதாரண அளவுள்ள மரம் தனது ஆயுட்காலத்தில் 32 லட்சம் ரூபாய் பெறுமான சேவையைச் செய்கின்றது.
- ஒவ்வோர் ஆண்டும் ஒரு மரம் தயாரித்து வெளியிடும் பிராண வாயு பெறுமானம் 5.5 லட்சம் ரூபாயாகும். காற்றைச் சுத்தரிக்கும் பணியை நாம் செய்ய முற்பட்டால் தொகை ரூ.10.5 லட்சமாகும்.
- மரம் வெட்டப்பட்டால் அங்கு அதே அளவு மண்வளத்தைப் பாதுகாக்க 50 ஆண்டுகளில் செலவாகும் தொகை ரூபாய் 6.4 லட்சமாகும். எனவே மரங்களை வளர்த்துச் சுற்றுச்சூழல் பாதுகாப்பது அவசியமாகின்றது.
எனவே இவ்வளவு நன்மைகளைத் தரும் மரங்களை வளர்ப்பதற்கு விவசாயிகள் தங்கள் நிலம், வரப்புகள், வாய்க்கால் ஓரங்கள், கிணற்று மேடு போன்ற பகுதிகளில் பயன்படுத்தலாம். மணற்பாங்கான நிலங்களிலும், சாகுபடிக்கு உதவாத வறண்ட பகுதிகளிலும், களர் உவர் நிலங்களிலும் மரங்களை வளர்க்கலாம். இதன்மூலம் விவசாயிகள் தங்களது தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
Emergency should be declared for planting tree every piece of vacant land