கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி நீர்த் தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை விட்டனர்.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரபள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து இரு பிரதான கால்வாய்களில் முதல்போக புன்செய் பாசனத்திற்காக 16.7.2014 முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 8,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.