ஆட்டு எரு: ‘மாட்டு எரு மறுவருஷம் பிடிக்கும்… ஆட்டு எரு அப்பவே பிடிக்கும்’ என்றொரு பழமொழி உண்டு. இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை, நம்மாழ்வார் பயிற்சி மூலமாக உணர்ந்திருக்கும் திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அடுத்துள்ள அம்மாபாளையம் கிராமத்தில் இருக்கும் மூர்த்தி-ஜெயசித்ரா இதை சிறப்பாகப் பயன்படுத்தியும் வருகின்றனார்.
இதைப் பற்றி பேசும் மூர்த்தி…”உரம் போடுறா தோட, களையையும் எடுக்குற வேலையைச் செய்துட்டு… சம்பளமே வாங்கிக்காத ஜீவன்கள்தான் செம்மறி ஆடுகள். காலையில 9 மணி தொடங்கி, சாயங்காலம் 4 மணி வரைக்கும் சம்பங்கி, கோழிக்கொண்டை வயலுக்குள் தலைகவிழ்த்திட்டு மாங்கு மாங்குனு இணைபிரியாம மேஞ்சுட்டே இருக்கும். வயல்ல முளைக்கிற களைகளைத் தின்னு அழிச்சுட்டே இருக்கும். அதுபோக பொழுதன்னிக்கும் அதுக போடுற புழுக்கைகள் பூச்செடிகளுக்கு நேரடி உரமா போய்ச் சேர்ந்துடும். மற்றபடி அதுகள கிடையில் அடைச்சு வைக்கும்போது, கிடைக்கிற ஆட்டு எருவையும் கொண்டுவந்து, வருஷம் இரண்டு தடவை வடகிழக்கு பருவமழைக்கு முன்னதா செடிக்கு 5 கிலோ வீதம் கொடுத்துடுவோம். இந்த உரம், மழையில நல்லாவே வேலை செஞ்சு, பெரிய பூக்களா மலர வைக்கும்.
10 செம்மறியாட்டுக் குட்டிகளை தலா 2,500 ரூபாய் விலையில், மொத்தம் 25,000 ரூபாய் விலையில், மொத்தம் 25,000 ரூபாய் கொடுத்து வாங்கி, பூ வயல்ல மேய விடுறோம். 5 மாதம் மேய்ஞ்ச பிறகு, தலா 5,000 ரூபாய்னு விற்பனை செய்றோம். பிறகு, புதுசா 10 குட்டிகளை வாங்கி வந்து மேய விடுறோம். ஆக, வருஷத்துக்கு 20 செம்மறி ஆடுகள விற்பனை செய்றது மூலமா… 50 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது. கூடவே களை எடுக்குற செலவு 10 ஆயிரம், எருச் செலவு 5 ஆயிரம் ரூபாய் மிச்சமாகுது. ஆகமொத்தம் செம்மறி ஆடுங்க மூலமா 65 ஆயிரம் ரூபாய் கிடைக்குது” என்கிறார் கண்களில் குஷிபொங்க!
தொடர்புக்கு,
மூர்த்தி,
செல்போன்: 97904-95966
நன்றி
பசுமை விகடன்