ஒரு காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும் உணவாக இருந்தன. இன்றைக்கோ… சிற்றுண்டியாகக்கூட சிறுதானியங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அரிசி சாப்பிடுவதுதான் கெளரவம் என்கிற நினைப்பில், ஏழைகள் கூட சிறுதானியங்களை மறக்க ஆரம்பித்ததுதான்… இன்றைக்கு ஏழை, பணக்காரர் என்று அனைவருக்குமே பலவித நோய்களுக்கு முக்கிய காரணியாக மாறிவிட்டிருக்கிறது. இத்தகையச் சூழலில், சிறுதானியங்களை, நவீனச் சூழலுக்கு ஏற்ப நாவுக்கு ருசியாக சமைத்துச் சாப்பிடுவதற்கு வழிகாட்ட வருகிறது… இந்த சமையல் பகுதி! இந்த இதழைப் பரிமாறுபவர் சந்தியா…
தேவையானப் பொருட்கள்:
நாட்டுச் சோளம் – 2 கப்
பார்லி – 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
கேசரி பவுடர் – சிறிதளவு
பனை சர்க்கரை – தேவைக்கேற்ப
செய்முறை:
நாட்டுச் சோளம் மற்றும் பார்லியை தனித்தனியாக 2 மணி நேரம் ஊறவைத்து, நீர் சேர்த்து மாவு போன்ற பதத்துக்கு அரைக்கவும். பிறகு, அரைத்த பார்லி மற்றும் நாட்டுச் சோளத்தை, பெரிய கண்ணுள்ள வடிகட்டியில், அதிலுள்ள சக்கைகள் நீங்கி விடும். பிறகு அந்தக் கலவையில் பனை சர்க்கரை மற்று ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்கு கொதிக்க வைக்கவும். கேசரி பவுடர் சேர்த்து, திரவ நிலை அடைந்தவுடன் இறக்கி, சூடாகப் பரிமாறவும்.
நன்றி
பசுமை விகடன்