32°C

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம் – பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பத்தின் (ITK) மூலம் தக்காளி மற்றும் கத்தரியில் விளைச்சலை அதிகரிக்க வழிமுறைகள் இயற்கை விவசாயம்

தொழில்நுட்பம் – பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பத்தின் (ITK) மூலம் தக்காளி மற்றும் கத்தரியில் விளைச்சலை அதிகரிக்க வழிமுறைகள்

இந்தியாவில் விவசாயம் புதியதாக த ற்சமயம் ஆரம்பிக்கப்படவில்லை அது புதிய கற்கால காலமான 7500 – 6500 கி.மு முன்பே செய்யப்பட்டு வருகிறது. அக்காலத்தில் மனிதன், காட்டுப் பழங்களையும் வேர்களையும் வேட்டையாடி உணவாக உண்டு வந்ததிலிருந்து நிலத்தை உழுது பயிர் செய்ய பழக ஆரம்பித்தான். பெரிய ஞானிகளின் முயற்சியினாலும், கற்றலினாலும், விவசாயம் பயனடைந்தது. அவர்களின் முயற்சியால் பெற்ற முறைகளை, அடுத்ததலைமுறையினரால் பின்பற்றப்பட்டு வந்தன. பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பத்தின் (ITK) மூலம் தக்காளி மற்றும் கத்தரியில் விளைச்சலை அதிகரிக்க […]

January 18, 2023 Editor
விவசாயத்தில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் (ஐ.சி.டி) பங்கு தொழில்நுட்பம்

விவசாயத்தில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் (ஐ.சி.டி) பங்கு

தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தை தொழில்நுட்பங்களின் கூடை என வரையறுக்கலாம். அவை சேமித்தல், தகவல்களை செயலாக்குதல் அல்லது தகவல் பரப்புதல் / தொடர்பு கொள்ளுதல் ஆகியவற்றில் துணைபுரிகின்றன. பொதுவாக வேளாண் வளர்ச்சிக்கும், குறிப்பாக விவசாய விரிவாக்கத்திற்கும் தகவல் தொழில்நுட்பங்களின் பொருத்தம் இந்தியா போன்ற நாட்டில் மிக அதிகம். விவசாயத்தில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் பயன்பாடு பெருகிய முறையில் அவசியம். மின்-வேளாண்மை என்பது மேம்பட்ட தகவல் மற்றும் தகவல் தொடர்பு செயல்முறை மூலம் விவசாய மற்றும் கிராமப்புற […]

December 15, 2020 editor news
கழிவு சிதைப்பான் (வேஸ்ட் டீகம்போசர்) பயன்பாடு தொழில்நுட்பம்

கழிவு சிதைப்பான் (வேஸ்ட் டீகம்போசர்) பயன்பாடு

இயற்கை வேளாண்மையில் முக்கிய அம்சங்களில் ஒன்று மண்ணின் வளத்தை பெருக்குவதாகும். இதற்காக பஞ்சகவ்யம், அமிர்தக் கரைசல், மீன்அமிலம் போன்ற பலவகையான இடுபொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவற்றை தயார் செய்யத் தேவையான மூலப்பொருட்களை சேகரிக்க அதிகநேரம் செலவாகிறது. ஆகவே மிககுறைந்த செலவில் எளிமையான முறையில் இடுபொருளைத் தயார்செய்ய வேஸ்ட் டீகம்போசர் என்ற பொருளை வேளாண் ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்துள்ளனர். இந்த வேஸ்ட் டீகம்போசர் என்றால் என்ன? நாட்டு மாட்டின் சாணம் மற்றும் கோமியத்தில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களை […]

December 15, 2020 editor news
குஜராத் மாநிலத்தில் மலர் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் சாதித்து காட்டிய கிராமப்புற மகளிர் தொழில்நுட்பம்

குஜராத் மாநிலத்தில் மலர் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் சாதித்து காட்டிய கிராமப்புற மகளிர்

கடந்த ஐந்த ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் உள்ள தாகூர் மாவட்டத்தின் லிம்கெடா வட்டத்தில் உள்ள கம்டோய் கிராமத்தில் துவங்கிய மலர் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி மிகப்பெரிய அளவிலான பொருளாதார முன்னேற்றத்தை கிராமப்புற பெண்கள் அடைய பெரிதும் உதவியுள்ளது. முந்தைய நெல் மற்றும் மக்காச்சோள சாகுபடிக்கு மாற்றாக விவசாயிகள் சாகுபடி செய்யும் மலர்கள், தோட்டக்கலை பயிர்களே சுமார் 650 விவசாயிகள் வாழ்க்கையை வெகுவாக முன்னேற செய்துள்ளது. இத்தகைய பொருளாதார முன்னேற்றம் காரணமாக இங்கு விவசாயிகள் பிள்ளைகள் அதிகளவு […]

December 1, 2020 editor news
சேற்று நெல்லுக்கு மாற்று நெல்லாக குறைந்த நீரில் குன்றாத விளைச்சல்!!! தொழில்நுட்பம்

சேற்று நெல்லுக்கு மாற்று நெல்லாக குறைந்த நீரில் குன்றாத விளைச்சல்!!!

நெற்பயிர் என்று நினைக்கும்போதே நம் எண்ணத்தில் தோன்றுவது சேற்று நீர் நிறைந்த நிலம்தான். ஆனால் நெற்பயிரை சேற்றுப் படுக்கையில்லாமல் மற்ற பயிர்களைப் போல் சொட்டு நீர் பாசனத்தில் வளர்க்கும் முறையை தென் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானி சங் ஜின் சோ(Sungjin choe) என்பவர் கண்டுபிடித்துள்ளார். இதற்கு அவர் வைத்துள்ள பெயர் ஸீட் பிலிம் கல்டிவேஷன்(Seed Film Cultivation – SFC). Seed Film Cultivation (SFC): இந்த முறையில் குறைந்த நீரில் இயற்கை சாணத்தை உரமாகக் கொண்டு […]

December 1, 2020 editor news
உணவு மற்றும் ஊட்டச்சத்து முக்கியத்துவம் வாய்ந்த பெரு வெற்றிலை வள்ளி கிழங்கிற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் தொழில்நுட்பம்

உணவு மற்றும் ஊட்டச்சத்து முக்கியத்துவம் வாய்ந்த பெரு வெற்றிலை வள்ளி கிழங்கிற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்கள்

பெரு வெற்றிலை வள்ளி (டயோஸ்கோரியா அலேட்டா) ஒரு வணிகப்பயிராக சுமார் 27,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, சுமார் 7.5 லட்சம் டன் உற்பத்தியோடு, சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 28 டன் மகசூல் பெறப்படுகிறது.  இது இந்தியாவில் ஆந்திரா, ஒடிசா, கேரளா, அசாம், குஜராத், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா போன்ற 13 மாநிலங்களில், பரவலாக பயிரிடப்படுகிறது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் பெரு வெற்றிலை வள்ளி சாகுபடி பெரு வெற்றிலை வள்ளி பல […]

December 1, 2020 editor news
செம்மை நெல் சாகுபடியில் களை எடுப்பதில் உள்ள சிரமங்களை எளிதாக்கும் கருவிகள் தொழில்நுட்பம்

செம்மை நெல் சாகுபடியில் களை எடுப்பதில் உள்ள சிரமங்களை எளிதாக்கும் கருவிகள்

நெல் சாகுபடியில் களை எடுப்பதில் உள்ள சிரமங்கள்: நெல் சாகுபடியில் களைக் கட்டுப்பாடு என்பது முக்கியமான தொழில்நுட்பம். ஆனால் தற்போது பண்ணைத் தொழலாளர்களின் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதால் களைக் கட்டுப்பாடு பிரச்சனையாக உள்ளது. பல இலட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்வதால் குறிப்பிட்ட காலத்தில் களை எடுக்க வேண்டும். நெல் உற்பத்தியில் எல்லா வேலைகளையும் எளிதாக விவசாயிகள் இயந்திரங்களைக் கொண்டு செய்கின்றனர் ஆனால் களை எடுப்பது மட்டும் பெண் தொழிலாலர்கள் மூலமாகவே நடைபெறுகிறது. பெண் தொழிலாளர்கள் கைக்களை […]

November 28, 2020 editor news
கழனியும் செயலியும் (பகுதி – 6) தொழில்நுட்பம்

கழனியும் செயலியும் (பகுதி – 6)

மண்ணில்லா விவசாயம் தொடங்கி, பல்வேறு ஆராய்ச்சிகள் வேளாண்மையில் நடைபெற்று வருகின்றன. என்னதான் ஆராய்ச்சிகள் எல்லாம் மலையை குடைந்து செல்வதாய் இருந்தாலும், வெற்றி என்னவோ மண் துகள் அளவே கிடைக்கின்றன. இதற்குக் காரணம், விவசாயிகளுக்கு மேம்படுத்தப்பட்ட உழவியல் முறைகளும், தொழில்நுட்பங்களும், நிகர்நிலை வானிலை மற்றும் விலை நிலவரங்களும் சரிவர கிடைக்காதிருப்பதே. இவற்றினை ஓரளவிற்கு ஈடுகட்ட உதவிடும் விஞ்ஞான நண்பனே வேளாண் செயலிகள். சென்ற கட்டுரையின் தொடர்ச்சியாக மேலும் சில செயலிகள் இங்கே…. Agri app விவசாயம் சார்ந்த சேவைகளை […]

November 20, 2020 editor news
வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு தொழில்நுட்பம்

வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

அறிவியல் மற்றும் பழங்காலத்திலிருந்து பின்பற்றப்படும் செயல்களை ஒருங்கிணைத்து அதை தொழில்நுட்பங்களாக உருவாக்கி, கிராமப்புற பெருகுடிமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய மற்றும் கஷ்டங்களில் இருந்து மீள அங்கு கிடைக்கும் பொருள்களை வைத்தே, ஏற்றுக்கொள்ள கூடிய,பணம் அதிகம் செலவில்லாத, பயனளிக்கக்கூடியதாக வழங்குவதே இந்த தொழில்நுட்பத்தின் நோக்கம். நெல்: கார்த்திகை தீபம் நாளில் நெல் விவசாயிகளுக்கு மழை பெய்ய, மழை நாட்களில், கோயில்களில் சொக்கப் பனை கொலுத்துத்தல் செய்யப்படுகிறது. அதாவது,பனை ஓலைகளை தீ வைத்து சாம்பலை விவசாயிகள் அவரவர் வயலில் […]

November 20, 2020 editor news
நேரடி நெல் விதைப்பு பயிரைத் தாக்கும் நெல் வேர் நூற்புழு தொழில்நுட்பம்

நேரடி நெல் விதைப்பு பயிரைத் தாக்கும் நெல் வேர் நூற்புழு

ஹிர்ஸ்மேனில்லா ஒரைசே என்றழைக்கப்படும் நெல் வேர் நூற்புழு நெற்பயிரைத்  தாக்கி அழிக்கக்கூடிய முக்கியமான நூற்புழுக்களுள் ஒன்றாகும். இது முதன் முதலில் 1902 ஆம் ஆண்டு ஜாவா தீவில் உள்ள நெல் வயலில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் இந்நூற்புழு நெற்பயிர் விளைவிக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் பரவிக் காணப்படுகின்றது. நெல் வேர் நூற்புழு போன்ற உருவத்துடன் காணப்படும் நீளமான நூற்புழுவாகும். இதனை உருப்பெருக்கியால் மட்டுமே காணமுடியும். இந்நூற்புழு வேரின் உள்ளே புகுந்து வாழ்நாள் முடிய நகர்ந்து கொண்டே  பயிரின் சாறை உறிஞ்சும் […]

November 19, 2020 editor news