32°C

விவசாய கட்டுரைகள்

🌿 கரிசலங்கண்ணியின் ஆரோக்கிய நன்மைகள் மருத்துவ குணங்கள்

🌿 கரிசலங்கண்ணியின் ஆரோக்கிய நன்மைகள்

🌿 கரிசலங்கண்ணியின் ஆரோக்கிய நன்மைகள் Eclipta prostrata – ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தின் அற்புத மூலிகை அறிமுகம் கரிசலங்கண்ணியின் அறிவியல் பெயர் எக்லிப்டா புரோஸ்ட்ராட்டா (Eclipta prostrata). இது 35 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள முக்கியமான களைகளில் ஒன்றாகும், மேலும் 17 வெவ்வேறு முக்கிய பயிர்களை பாதிக்கிறது. இது பொதுவாக ஈரமான மற்றும் வெப்பமண்டல பகுதிகளில், நெல் வயல்கள் மற்றும் நீர்நிலைகளில் ஒரு களையாக காணப்படுகிறது. பயிர் வயல்களில் களையாக இருந்தபோதிலும், மூலிகை தொழிலில் […]

April 7, 2026 veronica vergil
பூத்துக்குலுங்கும் பாலைவனம் விவசாய கட்டுரைகள்

பூத்துக்குலுங்கும் பாலைவனம்

உலகின் மிக வறண்ட பாலைவனங்களில் ஒன்றான அட்டகாமா பாலைவனத்தில், ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை, மழைக்குப் பின் பூக்கள் பூக்கும் அபூர்வ நிகழ்வு நிகழ்ந்துள்ளது. டெஸியெர்டோ ஃபுளோரிடா (Desierto Florido) என்று இந்நிகழ்வை அழைக்கின்றனர். இதற்கு ‘பூக்கும் பாலைவனம்’ என்று பொருள். அட்டகாமா அட்டகாமா பாலைவனம் தென் அமெரிக்க கண்டத்தின் சிலி நாட்டில் அமைந்துள்ளது. இப்பகுதி வறண்ட மழை மறைவு பிரதேசமாக மாற இதன் கிழக்குப் பகுதியில் இருக்கும் ஆண்டிஸ் மலைத் தொடர்களும் ஒரு […]

October 27, 2025 vanathi
பிரேசில் மக்கள் விரும்பும் இந்திய மாடுகள் விலங்குகள்

பிரேசில் மக்கள் விரும்பும் இந்திய மாடுகள்

நம் மக்கள் மட்டும் தான் வெளிநாட்டு கலப்பின மாடுகளை விரும்புகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா.? வெளிநாட்டினரும் அதே மோகத்தில் தான் உள்ளனர். அதிலும் குறிப்பாக அதிக பால், நல்ல இறைச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக நம் இந்திய நாட்டு மாடுகளின் கலப்பினங்களை அதிகளவில் விரும்புகின்றனர். அப்படிப்பட்ட ஆர்வத்தில் பிரேசில் மக்களால் உருவாக்கப்பட்டது தான் குஷெரா (Guzera) மாடுகள். இந்தியாவைச் சேர்ந்த கேங்கிரெஜ் (Kankrej) மாடுகளையும், பிரேசிலின் நாட்டு மாடுகளான டாரைன் கிரையுலா (Taurine Crioulo)-வையும் இணைத்து […]

July 13, 2023 vanathi
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயிகள் வேதனை விவசாய கட்டுரைகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்கனிகளை தகுந்த விலைகொடுத்து வாங்காமல் விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகமும், தமிழக முதல்வரும் தகுந்த நடவடிக்கை எடுத்து மாவட்ட விவசாயிகளின் துயரை போக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இல்லையெனில் கிருஷ்ணகிரியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை மா விவசாயிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அனைத்து மா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் மாங்கனிகளை நம்பியே, மாங்கூழ் தொழிற்சாலைகள் […]

May 27, 2023 Editor
இந்திய விவசாயத்தின்  6 முக்கிய சிக்கல்கள்! விவசாய கட்டுரைகள்

இந்திய விவசாயத்தின் 6 முக்கிய சிக்கல்கள்!

இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயம் ஒரு முக்கியமான துறை. பெருகிவரும் மக்கள் தொகைக்கு உணவளிப்பதோடு இங்கேயிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் விவசாயத் துறையானது அதன் உற்பத்தி மற்றும் அறுவடைக்குப் பின்னான விவசாயத்தில் விவசாயத்தை பாதிக்கும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. இந்தியாவில் விவசாயத்தில் உள்ள சில முக்கிய பிரச்சனைகளைப் பற்றி நாம் பார்ப்போம் துண்டு துண்டான விவசாய நிலங்கள் : இந்தியாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் சிறிய பரப்பளவிலான நிலங்களை வைத்துள்ளனர், சமீபத்திய கணக்கெடுப்பின்படி ஒவ்வொருவருக்கும் […]

March 13, 2023 Editor
தென்கிழக்கு ஆசியா முழுதும் தமிழர்கள் மீண்டும் சந்தையை ஆரம்பிக்கவேண்டும்! விவசாய கட்டுரைகள்

தென்கிழக்கு ஆசியா முழுதும் தமிழர்கள் மீண்டும் சந்தையை ஆரம்பிக்கவேண்டும்!

வானும் மண்ணும் – 2023 சர்வதேச வேளாண் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. அம்மாநாட்டின் தென்கிழக்கு ஆசியா முழுதும் தமிழர்கள் மீண்டும் சந்தையை ஆரம்பிக்கவேண்டும் என்ற முழக்கத்துடன் முதல் நாள் நிகழ்வு துவங்கியது. கிருஷ்ணகிரி: அக்ரிசக்தி ஒருங்கிணைத்து நடத்தும் இரண்டு நாள் ஜனவரி 7 மற்றும் 8ம் தேதியில் கிருஷ்ணகிரி நாளந்தான் சிபிஎஸ்இ சர்வதேசப் பள்ளியில் நடைபெற்தற. 07.01.2023 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு இம்மாநாட்டு துவங்கியது. இம்மாநாட்டின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசிய […]

January 12, 2023 Editor
மஞ்சள் தலை பறவை விவசாய கட்டுரைகள்

மஞ்சள் தலை பறவை

மஞ்சள் தலை பறவை நியூசிலாந்து நாட்டின் 100 ரூபாய் டாலர் நோட்டில் இடம்பெற்றுள்ள இந்த மஞ்சள் தலை பறவைகள், மோஹுவா என்றும் அழைக்கப்படுகின்றன. இவை நியூசிலாந்தின் தெற்குத்தீவில் மட்டுமே வாழும் ஓரிட வாழ்விகளாகும். இவற்றின் விலங்கியல் பெயர் மோஹுவா ஓக்ரோசெஃபாலா (Mohoua ochrocephala). கடற்கரை காடுகளில் வாழும் இப்பறவைகள் பூச்சிகளை விரும்பி உண்கின்றன. மரப்பட்டைகளுக்கு இடையேயும், தண்டுகளுக்கிடையேயும் இலைகளின் மேலும் காணப்படும் பூச்சிகளையும், கம்பளிப் புழுக்களையும், சிலந்திகளையும் தேடி உண்கின்றன. அரிதாக சில நேரங்களில் சிறிய பழங்களையும் […]

August 8, 2022 Editor
செம்முக குரங்குகளும் மனிதர்களும் விவசாய கட்டுரைகள்

செம்முக குரங்குகளும் மனிதர்களும்

மனிதர்களுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் பரவியுள்ள குரங்கினம் செம்முக குரங்குகளே. ஆசிய கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இக்குரங்குகள் இப்போது வட அமெரிக்காவிலும் பரவியுள்ளன. மருத்துவ ஆராய்ச்சிக்காகவும், விலங்கியல் பூங்காவுக்காகவும் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட குரங்குகளில் தப்பியவை இன்று அங்கு பெருங்குழுக்களாக வாழ்ந்து வருகின்றன. காடுகள், மலைகள், புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், பாறை பகுதிகள் என பல வகைப்பட்ட சூழலிலும் இவை வாழக் கூடியவை. பெரும்பாலும் மனித குடியிருப்புகளுக்கு அருகில் வாழ்வதையே விரும்புகின்றன. உருவமைப்பும் வாழ்க்கை முறையும் இளம் […]

July 23, 2022 vanathi
பாலைவனக் காடுகள் விவசாய கட்டுரைகள்

பாலைவனக் காடுகள்

ஸ்பெய்ன், திபெத், மத்தியகிழக்கு நாடுகள், சிலே…..இப்படி பல நாடுகளின் பாலைவனங்களை காடுகள் ஆக்கிவருகிறது ஒரு புதிய தொழில்நுட்பம். அதன்பெயர் க்ரோஆசிஸ் (groasis) இயற்கையில் விதைகள் மரமாவது எப்படி எனில்  ஒரு பறவை பழத்தை உண்டு கொட்டையை கழிவுடன் சேர்த்து கழிக்கும். பறவையின் கழிவின் ஈரப்பதம் விதையை வெப்பத்தில் இருந்து காக்கும். வேர்கள் நீரை தேடி மெதுவாக பூமியில் வளர ஆரம்பிக்கும். க்ரோஆசிஸ் என்பது ஒரு காம்போஸ்ட் ஆகக்கூடிய ஒரு பெட்டி. அதனுள் மரத்தின் நாற்றை நட்டு பூமியில் […]

July 23, 2022 Neander Selvan