உன்னத உழவனும் உழவும்

0
1923

உலகம் உன்னதமான உயிரோட்டமான உருண்டையானது

உயிரோட்டமான உலகில் உடலை உழித்து,

உயிரை உருக்கி உழுபவன் உழவன்

உழவன் உழவில்லையெனில் உணவில்லை உலகில்

உணவில்லா உலகில் உயிர் உள்ள உயிர்களெல்லாம்,

உடலில் ஊற்றென உதித்த உதிரம் உதிர்த்து

உணவு உட்கொள்ளும் உபத்திரம் உருவாகும் உலகில்!

உழவனை உயர்த்தி உயிர்களுக்கு உயிர் ஊட்டுவோம்

உலகில் உயர்ந்தது உழவனும் உழவுமென

உலகிற்கு உணர்த்தி உயர்த்துவோம்.

கவிதையாக்கம்: செ. நந்தகுமார், வேளாண் பட்டதாரி, சேலம் சட்டூர். மின்னஞ்சல்: nandhaselvam27762@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here