Skip to content

தென்னைத் தோட்டங்களில் உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கான உழவர் பங்கேற்பு ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்கம்

முன்னுரை

தென்னை இந்தியாவில் உள்ள வணிகப்பயிரில் ஒரு முக்கியமான தோட்டப் பயிராகும். இது ஆண்டு முழுவதும் விவசாய குடும்பத்திற்கு சிறந்த வேலை வாய்ப்பு மற்றும் குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான வருமானம் கிடைப்பதில்லை. மேலும் அதிக அளவு விலை ஏற்ற இறக்கம் தென்னை விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. தென்னை மரத்தின் தனித்துவமான தாவரக் கட்டமைப்பு  மரங்களுக்கிடையில் பயன்படுத்தப்படாத பெரும்பகுதியை (75%) ஊடுபயிர் சாகுபடிக்கு போதுமான வாய்ப்பை வழங்குகிறது. வெப்பமண்டல கிழங்கு பயிர்களான மரவள்ளி, சேனை மற்றும் பெருவள்ளிக் கிழங்கு ஆகியவை நல்ல உற்பத்தி திறன், சமையல் தரம், சுவை, மருத்துவ மற்றும் சத்தான மதிப்புகள் கொண்ட மாவுச்சத்து காய்கறிகளாகும். கிழங்கு பயிர்கள் பீட்டா கரோட்டீன், ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் தாது உப்புகளின் நல்ல ஆதாரங்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல், உணவு பங்களிப்பில் சுமார் 6% என மதிப்பிடப்பட்டுள்ளது. கிழங்கு பயிர்கள் அதிக விளைச்சல் செயல்திறனைக் கொண்ட, வறட்சியையும் நிழலையும் பொறுத்துக்கொள்ளக்கூடிய, நீர் மற்றும் உப்புத்தன்மையை ஓரளவிற்கு தாங்கக்கூடிய, குறைந்த இடுபொருட்கள் உபயோகம் மற்றும் பாதகமான மண் மற்றும் காலநிலைகளுக்கு ஏற்றவையாகும். இந்த பயிர்களுக்கு குறைவான நீர் மற்றும் இடுபொருட்கள் தேவை, பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்கம் குறைவு ஆகிய பண்புகளால் இப்பயிர்கள் ‘பருவகாலநிலை தாங்கிகள்’ மற்றும் ‘வருங்கால பயிர்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

தென்னை + கிழங்கு பயிர்கள் சாகுபடியின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம்

தென்னை தோட்டங்களில் கிழங்கு பயிர்களின் பொருத்தம் மற்றும் சாகுபடியின் தன்மையை ஐ.சி.ஏ.ஆர்-சி.டி.சி.ஆர்.ஐ  ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க பணிகளின் மூலம் சிறப்பாக செய்துள்ளது. பிரதான பயிர் வருமானத்தை வழங்குகிறது, கிழங்கு பயிர்கள் குடும்பத்திற்கு உயர் ஆற்றல் இரண்டாம் நிலை உணவாகவும், பண்ணை விலங்குகளுக்கு உணவளிக்கவும் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு எதிராக காப்பீட்டு பயிராகவும் செயல்படுகின்றன. தென்னை தோட்டங்களில் கிழங்கு பயிர்களை ஊடுபயிராக செய்தல் மற்றும் கிழங்கு பயிர்களில் நிலையான மண் மேலாண்மை நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அதிக மகசூல் (10-25%), அதிக இலாபம் (20-30%) மற்றும் அதிக வேலைவாய்ப்பு (220-250 மனித வேலை நாட்கள் ஒரு ஹெக்டேருக்கு) மற்றும் சந்தையில் உயர் மற்றும் நிலையான விலை (ஒரு கிலோ கிழங்குகளுக்கு ரூ. 40 முதல் 50 வரை) கிடைக்கிறது. அதிக உற்பத்தித்திறன் மற்றும் இலாபத்தை உருவாக்குதலை நோக்கமாகக் கொண்டு கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மூன்று மாவட்டங்களில் முப்பது உழவர் பங்கேற்பு செயல்விளக்கங்கள் உருவாக்கபட்டுள்ளன.

கிழங்கு பயிர்களில் ஊட்டச்சத்து தொழில்நுட்ப மேலாண்மை

ஐ.சி.ஏ.ஆர்-சி.டி.சி.ஆர்.ஐ கிழங்கு பயிர்களில் தள குறிப்பிட்ட ஊட்டச்சத்து மேலாண்மை (எஸ்.எஸ்.என்.எம்) மற்றும் இயற்கை வேளாண் தொழில்நுட்பங்கள் அடிப்படையில் பல்வேறு வேளாண்-சுற்றுச்சூழல் மண்டலங்களுக்கு பொருத்தமான தனிப்பயனாக்கப்பட்ட உரங்கள் சார்ந்த ஊட்டச்சத்து மேலாண்மை தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பங்கள் முறையில் உற்பத்தித்திறன் மற்றும் இலாபத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், தென்னை விவசாய முறையில் உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் முடிகிறது.

எஸ்.எஸ்.என்.எம் தொழில்நுட்ப தனிப்பயனாக்கப்பட்ட உரங்கள்: மரவள்ளி மற்றும் சேனை கிழங்கிற்கான தனிப்பயனாக்கப்பட்ட உரங்கள் மண்ணின் தரத்தை பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் சராசரியாக 24% மகசூலை அதிகரிக்கவல்லது. குறிப்பிட்ட மகசூல் இலக்குகளை அடைய கிழங்கு பயிர்களில் ஊட்டச்சத்து தேவைகளை நிர்வகிக்க மண் பரிசோதனை மதிப்புகளின் அடிப்படையில் முதன்மை மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களைக் கொண்ட தனிப்பயனாக்கப்பட்ட உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இயற்கை வேளாண் தொழில்நுட்பங்கள்: மரவள்ளி, சேனை, வெற்றிலை வள்ளி, சேம்பு, சிறு கிழங்கு மற்றும் ஆரோரூட் ஆகியவற்றில் இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களின் மூலம் 10-20% அதிக மகசூல், 20-40% இலாபம், கிழங்குகளின் தரம் மற்றும் மண்ணின் ஆரோக்கியம் மேம்படுகிறது. கிழங்கு பயிர்களின் ஊட்டச்சத்து தேவைகளை நிர்வகிக்க இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் நடவு பொருட்கள், இயற்கை உரங்கள், பசுந்தாள் உரங்கள், உயிர் உரங்கள், நுண்ணுயிரிகள் மற்றும் இயற்கை பூச்சி மற்றும் நோய்கொல்லிகள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

செயல்விளக்கம் தொடங்குவதற்கு முன்னர் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஊட்டச்சத்து பண்புகளுக்கான பகுப்பாய்வு செய்யப்பட்டது. எஸ்.எஸ்.என்.எம் மற்றும் இயற்கை வேளாண்மை பற்றிய 30 செயல்விளக்கங்களை மூன்று மாவட்டங்களில் மேற்கொள்ள தேவையான நிதி கொச்சியில் உள்ள தென்னை மேம்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்டது.

உழவர் பங்கேற்பு செயல்விளக்கத்தை நடைமுறைப்படுத்துதல்

ஐ.சி.ஏ.ஆர்-சி.டி.சி.ஆர்.ஐயின் விஞ்ஞானிகள் மற்றும் அலுவலர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் விவசாயிகளின் முழு பங்கேற்புடன் உழவர் பங்கேற்பு செயல்விளக்கங்கள் உருவாக்கப்பட்டன. மேம்பட்ட கிழங்கு வகை பயிர்களின் நடவு பொருட்கள், முக்கியமான இடுபொருட்கள், தனிப்பயனாக்கப்பட்ட உரங்கள் மற்றும் இயற்கை சார்ந்த இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. தென்னை + கிழங்கு பயிர்கள் சாகுபடி முறைகளில் ஊட்டச்சத்து மேலாண்மை தொழில்நுட்பங்களின் சாத்தியக்கூறு மற்றும் பொருளாதார நம்பகத்தன்மையை நிரூபிக்க கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் முப்பது செயல்விளக்கங்கள் உருவாக்கப்பட்டன  (படம் 1).

படம் 1. தென்னை + கிழங்கு பயிர்களில் ஊட்டச்சத்து மேலாண்மை பற்றிய செயல்விளக்கங்கள்

ஐ.சி.ஏ.ஆர்-சி.டி.சி.ஆர்.ஐ., திருவனந்தபுரம்; சிறைத்துறை, கேரள அரசு மற்றும் தென்னை மேம்பாட்டு வாரியம் (சி.டி.பி) இணைந்து ஒரு கூட்டுத் திட்டத்தைத் துவக்கி, திருவனந்தபுரத்தில் உள்ள நெட்டுகல்தேரியில் அமைந்துள்ள திறந்த சிறை மற்றும் திருத்த இல்லத்தில் ‘கிழங்கு பயிர் அருங்காட்சியகம்’ ஒன்றை அமைத்துள்ளது. நடவு பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்கி இத்திட்டம் மார்ச் 2018 இல் தொடங்கியது. தென்னை தோட்டத்தில் இயற்கை வேளாண் முறையில் வெற்றிலை வள்ளிக் கிழங்கு சாகுபடி தொடங்கப்பட்டது. வெற்றிலை வள்ளி பயிரின் அறுவடை மற்றும் கிழங்கு பயிர்கள் அருங்காட்சியகத்தை நிறுவுதல் மார்ச் 07, 2019 அன்று திருமதி ஆர். ஸ்ரீலேகா ஐ.பி.எஸ்., கேரள சிறைச்சாலை அவர்களால் திறக்கப்பட்டது (படம் 2). ஐ.சி.ஏ.ஆர்-சி.டி.சி.ஆர்.ஐ இயக்குநர் டாக்டர் அர்ச்சனா முகர்ஜி இந்நிகழ்ச்சியை அரங்கேற்றி சிறப்புரையாற்றினார்.

படம் 1. தென்னை + கிழங்கு பயிர்களில் ஊட்டச்சத்து மேலாண்மை பற்றிய செயல்விளக்கங்கள்

ஐ.சி.ஏ.ஆர்-சி.டி.சி.ஆர்.ஐ., திருவனந்தபுரம்; சிறைத்துறை, கேரள அரசு மற்றும் தென்னை மேம்பாட்டு வாரியம் (சி.டி.பி) இணைந்து ஒரு கூட்டுத் திட்டத்தைத் துவக்கி, திருவனந்தபுரத்தில் உள்ள நெட்டுகல்தேரியில் அமைந்துள்ள திறந்த சிறை மற்றும் திருத்த இல்லத்தில் ‘கிழங்கு பயிர் அருங்காட்சியகம்’ ஒன்றை அமைத்துள்ளது. நடவு பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்கி இத்திட்டம் மார்ச் 2018 இல் தொடங்கியது. தென்னை தோட்டத்தில் இயற்கை வேளாண் முறையில் வெற்றிலை வள்ளிக் கிழங்கு சாகுபடி தொடங்கப்பட்டது. வெற்றிலை வள்ளி பயிரின் அறுவடை மற்றும் கிழங்கு பயிர்கள் அருங்காட்சியகத்தை நிறுவுதல் மார்ச் 07, 2019 அன்று திருமதி ஆர். ஸ்ரீலேகா ஐ.பி.எஸ்., கேரள சிறைச்சாலை அவர்களால் திறக்கப்பட்டது (படம் 2). ஐ.சி.ஏ.ஆர்-சி.டி.சி.ஆர்.ஐ இயக்குநர் டாக்டர் அர்ச்சனா முகர்ஜி இந்நிகழ்ச்சியை அரங்கேற்றி சிறப்புரையாற்றினார்.

படம் 2. திறந்த சிறை மற்றும் திருத்த இல்லம், திருவனந்தபுரத்தில் ‘கிழங்கு பயிர்கள் அருங்காட்சியகம் திருமதி. ஸ்ரீலேகா, ஐ.பி.எஸ், அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது    

திட்ட எதிர்பார்ப்புகள்

  • இந்த செயல்விளக்கத் திட்டங்கள் விவசாயிகள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு மாதிரித் திட்டங்களாக செயல்படும்.
  • ஊட்டச்சத்து மேலாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் பல்வகை பயிர் சாகுபடி ஆகியவற்றைப் கடைபிடிப்பதன் மூலம் தென்னை மற்றும் கிழங்கு பயிர்களின் உற்பத்தித்திறன் மற்றும் பண்ணை வருமானம் மேம்படுத்தப்படும்.
  • செயல் விளக்கங்களை அதிகமாக்குவதன் மூலம் இந்தயாவில் தென்னை மற்றும் கிழங்கு பயிர்களின் தன்னிறைவை அடைய வழிவகுக்கும்.

திட்டத்தை வலுப்படுத்துதல்

கிழங்கு பயிர்களின் அறுவடையின் போது விவசாயிகள் மற்றும் பிற பங்குதாரர்களை உள்ளடக்கிய தொழில்நுட்பங்களின் வெற்றியை அங்கீகரிக்கவும், தென்னை தோட்டங்களில் கிழங்கு பயிர்களின் மேம்பட்ட தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும் ‘கள தினம்’ ஏற்பாடு செய்யப்படும். வெற்றிகரமான தொழில்நுட்பங்களை வேளாண் அறிவியல் மையம், வேளாண்மைத்துறை மற்றும் பிற வேளாண் சார்ந்த துறைகளுக்கு பிரபலப்படுத்துவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை நிலையான அடிப்படையில் இரட்டிப்பாக்குவதற்கும் நிறைய பகுதிகளில் தொழில்நுட்பங்களை பெரிய அளவில் கடைபிடிக்க பரிந்துரைக்கப்படும்.

ஒப்புதல்

இந்த செயல் விளக்கத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய தென்னை மேம்பாட்டு வாரியம், கொச்சி, வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம், இந்திய அரசிற்கு எழுத்தாளர்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளனர்.

கட்டுரையாளர்கள்: முனைவர்கள் ஜி. பைஜு, ஜி. சுஜா, து. ஜெகநாதன் மற்றும் ப. பிரகாஷ், ஐ. சி. ஏ. ஆர் – மத்திய கிழங்குப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம், திருவனந்தபுரம் 695017, கேரளா. மின்னஞ்சல்: byju.g@icar.gov.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news