Skip to content

வேளாண் பட்டயப்படிப்புகள் (Diploma in Agriculture)-ஒரு கண்ணோட்டம்

தமிழ்நாடு அளவில், வேளாண்மை பட்டய‌ப்படிப்பு என்பது இரண்டு வருட படிப்பு ஆகும். தமிழ் நாட்டில் வேளாண் பட்டய‌ப்படிப்புகளுக்கு, வேளாண்மை பட்டப்படிப்பை போன்றெ மோகம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அளவில், 2020 -21 ஆம் கல்வி ஆண்டுகான வேளாண் பட்டய‌ப்படிப்பு படிப்பதற்கான சாத்தியக் கூறுகளை இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.

 

தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைகழகங்கள் வேளாண் பட்டய‌ப்படிப்புகளை பயிற்றுவிக்கின்றன. இதில் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மிக முக்கியமான பல்கலைகழகங்கள் ஆகும்.

 

இப்பட்டயப் படிப்புகளைத் தேர்ந்தெடுக்க, பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் ஒரு முக்கிய பாடங்களாக இருத்தல் அவசியம்.  பன்னிரண்டாம் வகுப்பில் வேளாண் தொழிற்கல்வி (Vocational Group) படித்தவர்களுக்கு, உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் ஒரு முக்கிய பாடங்களாக இருந்தால், இப்பட்டயப் படிப்புகளை தேர்ந்தெடுக்க முடியும்.

 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்:

 

இப்பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டயப்படிப்பு (Diploma in Agriculture) மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்பு (Diploma in Hortculture) ஆகிய‌ இரண்டு  பட்டயப்படிப்புகள் அளிக்கப்படுகிறது.

 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ், வேளாண்மை பட்டயப்படிப்பினை, அரசு நிறுவனமான வேளாண்மை நிலையம் (500 இடங்கள்), வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுலூர்-‍ல் ஆங்கில‌ வழியிலும், தேசிய பயறுகள் ஆராய்ச்சி மையம் (40 இடங்கள்), வ‌ம்பன்‍, புதுக்கோட்டை-ல் தமிழிலும் அளிக்கப்படுகிறது. இதெபோல், தோட்டக்கலைபட்டயப்படிப்பினை தோட்டக்கலை நிறுவனம் (40 இடங்கள்), தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், பேச்சிப்பாறை-ல் ஆங்கில‌ வழியிலும் அளிக்கப்படுகிறது.

 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ராமகிருஷ்ணா மிஷன் (50 இடங்கள் – ஆண்களுக்கு மட்டும்) (மேட்டுபாளையம், கோவை), ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி (100 இடங்கள்) (கலவை, வேலூர்), சகாயத்தோட்டம் வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு நிறுவனம் (70 இடங்கள்) (சகாயத்தோட்டம், ராணிபேட்டை),  வானவராயர் வேளாண் கல்லூரி (50 இடங்கள்) (பொள்ளாச்சி), PGP வேளாண் கல்லூரி (70 இடங்கள்) (நாமக்கல்), அரவிந்தர் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி (70 இடங்கள்), (கலசபாக்கம், திருவண்ணாமலை) மற்றும் ராகா வேணாண் கல்லூரி (50 இடங்கள்) (கோவில்பட்டி) ஆகிய தனியார் இணைப்பு கல்லூரிகளும் வேளாண்மை பட்டயப்படிப்பினை அளிக்கிறது. இதெபோல், தோட்டக்கலைபட்டயப்படிப்பினை, ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி (70 இடங்கள்) (கலவை, வேலூர்) அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, MIT வேளாண் தொழில்நுட்ப கல்லூரி,முசிறி, திருச்சி-ல் வேளாண்மை பட்டயப்படிப்பினையும், தோட்டக்கலை பட்டயப்படிப்பினையும் தொடங்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

வேளாண் பட்டய‌ப்படிப்புகான மாணவர் சேர்க்கை  தர வரிசையின் அடிப்படையில் கவுன்சிலிங்கின் மூலம் நிரப்பப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு மற்றும் விணப்பிக்க https://tnau.ac.in/ என்ற இணையதளத்தினை அணுகவும்.

 

அண்ணாமலைப் பல்கலைகழகம்:

 

இப்பல்கலைக்கழகத்தில், வேளாண்மை  மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்புகள் என்ற இரண்டு  பட்டய‌ப்படிப்புகள் அளிக்கப்படுகிறது.  மொத்தம் உள்ள சீட்டில், 60 விழுக்காடு, பன்னிரண்டாம் வகுப்பில் வேளாண் தொழிற்கல்வி (Vocational Group) படித்தவர்களுக்காக‌ நிரப்பபடுகின்றன, மீதமுள்ள சீட்டுகள் பிற பிரிவுகளுக்காக‌ நிரப்பபடுகின்றன.

மேலும் விவரங்களுக்கு மற்றும் விணப்பிக்க https://annamalaiuniversity.ac.in/ என்ற இணையதளத்தினை அணுகவும். விண்ணபிக்க மற்றும் விண்ணப்பித்த படிவத்தினை அனுப்ப 17.08.2020 கடைசி நாளாகும்.

 

தமிழ் நாடு அரசுதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

 

தமிழ் நாடு அரசின் நேரடி கட்டுபாட்டின் கீழ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் (Department of Horticulture and Plantation Crops) துறை வழியாக பின்வரும் மூன்று இடங்களில் தோட்டக்கலைபட்டய‌ப்படிப்பினை மட்டும் அளிக்கிறது. 1. தமிழ் நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையம், மாதவரம், சென்னை 2.தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி மையம், தளி, கிரிஷ்ணகிரி 3. காய்கறி உயர்திறன்மையம், ரெடியார்சத்திரம்,திண்டுக்கல். இந்த மூன்று மையங்களில் அளிக்கப்படுகிற தோட்டக்கலை பட்டய‌ப்படிப்பினை கூடிய விரைவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப் படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு மற்றும் விணப்பிக்க http://www.tnhorticulture.tn.gov.in/ என்ற இணையதளத்தினை அணுகவும்

 

மத்திய அரசின் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான, காந்திகிராம் பல்கலைக்கழகமும் (திண்டுக்கல்) வேளாண்மை பட்டய‌ப்படிப்புகளை நடத்துகிறது.

 

குறிப்பு:

 

  1. பொறியியல் டிப்ளமோ போன்று, பத்தாம் வகுப்பு முடித்தவுடன் வேளாண் டிப்ளமோ படிப்பில் சேர முடியாது.
  2. பொறியியல் டிப்ளமோ போன்று, வேளாண் டிப்ளமோ படித்த பிறகு, இதன் மதிப்பெண்ணை வைத்து வேளாண் பட்டப் படிப்பில் சேர முடியாது. வேளாண் டிப்ளமோ படித்த பிறகு, வேளாண் பட்டப் படிப்பினை படிக்க விருப்பினால், மீண்டும் பன்னிரண்டாம் மதிப்பெண் அடிப்படையிலே மட்டுமெ விண்ணபித்து சேர முடியும்.

 

கட்டுரையாளர்கள்:

1. முனைவர்  செ. சேகர், உதவி பேராசிரியர் (பூச்சியியல் துறை), ஆர். வி. ஏஸ் வேளாண்மை கல்லூரி, தாஞ்சாவூர். மின்னஞ்சல்: sekar92s@gmail.com

2. சூரியா. ச, முதுங்கலை வேளாண் மாணவர், (பூச்சியியல் துறை), வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம், தூத்துக்குடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news