Skip to content

மக்காச்சோளப் பயிரில் களை மேலாண்மை

மக்காச்சோளப் பயிரானது தமிழகத்தில் முக்கியமாக கோவை, ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இறவையிலும்,  பெரம்பலூர், சேலம், திண்டுக்கல், தேனி மற்றும் தென் மாவட்டங்களில் மானாவாரியிலும் சுமார் 1.5 லட்சம் ஹெக்டரில் பயிரடப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களை விட உற்பத்தி குறைவாக உள்ளது. அதற்கான காரணங்கள்

  1. மானாவாரியாக பயிரிடுதல்
  2. பழைய தொழில்நுட்பத்தையே சார்ந்திருத்தல் மற்றும் இரகம் தேர்வு
  3. நிர்ணயக்கப்பட்ட அளவில் மக்காச்சோள செடியை பராமரிக்க இயலாமை
  4. களைகள் மற்றும் படைப்புழு தாக்குதல்

களைகள்:

விவசாயிகள் மக்காச்சோள விதை ஊன்றியவுடன், களையும் மக்காச்சோளமும் சேர்ந்தே முளைக்க ஆரம்பிக்கிறது. களையானது மக்காச்சோளத்துடன் நீர், ஊட்டச்சத்து மற்றும் சூரிய ஒளி தேவைகளுக்காக போட்டியிடுகிறது. விவசாயிகள் 30-35 நாட்கள் வரையில் எந்த விதமான களைக் கட்டுப்பாடும் செய்யவில்லையென்றால் அதிக மகசூல் இழப்பு ஏற்படும். விவசாயிகள் களையைக் கட்டுப்படுத்த முயன்றால், கைக்களை எடுக்க – ரூ.6000 / ஏக்கருக்கு என்ற அளவிலும், களைக்கொல்லிக்கு – ரூ.1500 / ஏக்கருக்கு செலவும் ஆகின்றது.

மக்காச்சோள களைக்கொல்லி

  • செடி முழுவதும் ஊடுருவி செயல்படும் திறன்
  • அகன்ற இலை மற்றும் புல் வகைக் களைகளைத் திறமையாகக் கட்டுப்படுத்தும்.
  • இக்களைக்கொல்லி களைகளின் பச்சையத்தினை அழித்து, பழுப்பு நிறமாக மாற்றி, இறுதியாக களையானது காயந்து போகிறது.

மருந்து பயன்படுத்த வேண்டிய அளவு

  • 115 டெம்போட்ரயான் 42% + 400 கிராம் அட்ரசின் + 400 மி.லி. ஆக்டிவேட்டர் ஆகியவற்றை முறையே 6:1:6 (லிட்டர் தண்ணீரில்) எனத் தனித்தனியாக கரைத்து வைத்துக்கொள்ளவும்.
  • பின்பு மேற்சொன்ன வரிசைப்படி ஒன்றுடன் ஒன்றை கலந்து (ஆக்டிவேட்டர் கடைசியாக) 13 லிட்டர் கொண்ட மருந்து கலவை கிடைக்கும்.
  • இம்மருந்து கலவையிலிருந்து ஒவ்வொரு முறையும் ஒரு லிட்டர் வீதம் 13 டேங்க்கிற்கு (150 லிட்டர் தண்ணீரில்) கலந்து தெளிக்க வேண்டும்.

பயன்படுத்த வேண்டிய நேரம்

  • விதைப்புக்கு பின்பு 12-15 நாட்களில்-மண்ணில் தகுந்த ஈரப்பதம் மிக முக்கியம் (அல்லது) புதிதாக முளைக்கின்ற மற்றும் 4-6 இலைகள் கொண்ட களைகள் இந்த சூழலில் தெளிக்கலாம்.

பரிந்துரைகள்

  • டெம்போட்ரயானை அட்ரசினுடன் சேர்த்து தெளிக்க வேண்டும்.
  • மக்காச்சோளத்தைத் தொடர்ந்து காய்கறிகள் பயிரிடுவதாக இருந்தால், அட்ரசினின் உபயோகம் தவிர்க்கப்பட வேண்டும்.
  • டெம்போட்ரயான் கோரையின் வளர்ச்சியை ஒரளவு தடுக்கும், அவற்றை முற்றிலும் கட்டுப்படுத்த இயலாது.

மக்காச்சோள களைக்கொல்லியின் நன்மைகள்

  • பயன்படுத்துவது சுலபம்
  • நீண்ட கால களைக் கட்டுப்பாடு (25-30 நாட்கள்)
  • குறைந்த செலவு, களை வரும் முன்பாக அல்லது புதிதாக முளைக்கின்ற களைகளைக் கட்டுப்படுத்தும்
  • களைகளைக் கட்டுப்படுத்தப் படுவதன் மூலம் பூச்சி மட்டும் நோய் காரணிகள் களைகள் மூலம் பரவுவதை தடுக்க முடியும்.

களைக்கொல்லி தெளிக்கும் போது

செய்ய வேண்டியவை

  • டெம்போட்ரயான் மற்றும் ஆக்டிவேட்டரை அட்ரசினுடன் பரிந்துரைக்கப்பட்ட அளவில் உபயோகிக்கவும்
  • மண்ணில் கால் பதியும் அளவிற்கு ஈரப்பதம் இருப்பது முக்கியம்
  • ஒரு ஏக்கருக்கு தேவையான மருந்து மற்றும் 150-200 லிட்டர் தண்ணீர்
  • விதைப்புக்கு பின்பு 12-15 நாட்களில் / 2-4 இலைகள் கொண்ட களைகள்
  • களைக்கொல்லி மட்டும் தனியாக பயன்படுத்தவும்
  • மருந்து தெளித்த பின்பு 2-3 மணி நேரம் மழை இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
  • தட்டைவிசிறி / விசைத்தெளிப்பு முனைகள் (நாஸல்) பொருத்தப்பட்ட கைத்தெளிப்பானையே பயன்படுத்த வேண்டும்

செய்யக்கூடாதவை

  • பரிந்துரைக்கப்பட்ட அளவை விடக் குறைந்த அளவிலோ அல்லது அதிக அளவிலோ தெளிக்கக்கூடாது.
  • மண்ணில் தகுந்த ஈரப்பதம் இல்லாத போது மருந்து தெளிப்பதை தவிர்க்கவும்
  • விதைப்புக்கு முன்பே மருந்து தெளிக்கக் கூடாது
  • நன்றாக வளர்ந்த களைகள் மீது தெளிப்பதைத் தவிர்க்கவும்
  • பவர் ஸ்பிரேயர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
  • எந்தவித மருந்தையும், களைக்கொல்லியுடன் கலந்து தெளிக்கக்கூடாது
  • காற்றில் (drift) அடித்துச் செல்லப்படுவதைத் தவிர்க்கவும்.
  • டெம்போட்ரயானுடன் ஆக்டிவேட்டரை துவக்கத்தில் கலப்பதைத் தவிர்க்கவும்

கட்டுரையாளர்கள்:

  1. முனைவர். ஆ. குழந்தைவேல் பிள்ளை, தொழில்நுட்ப வல்லுநர், கோத்ரேஜ் அக்ரோவெட் லிட், – திருச்சி. மின்னஞ்சல்: kuzhandhai635@gmail.com
  1. மு. ஜெயராஜ், உதவிப் பேராசிரியர் (உழவியல்), தொன் போஸ்கோ வேளாண்மைக் கல்லூரி, சகாயத்தோட்டம், இராணிப்பேட்டை மாவட்டம். மின்னஞ்சல்: jayarajm96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news