Skip to content

களை, களைக்கொல்லி, களைக்கொல்லி பரிந்துரை, களைக்கொல்லியின் எதிர்மறைகள் என்றால் என்ன?

களை என்றால் என்ன ?

  • களைகள் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் விரும்பத்தகாத தாவரங்கள்.
  • பண்ணை வயல்கள், தோட்டங்கள் மற்றும் பூங்காக்கள்(புல்வெளிகள்) போன்ற மனித கட்டுப்பாட்டு அமைப்புகளில் தேவையற்ற தாவரங்கள்.

களைக்கொல்லி என்றால் என்ன ?

வேதிப் பொருள்/ இயற்கையான பொருட்களைக் கொண்டு ஒரு தாவரத்தை கொல்வதே களைக்கொல்லியின் செயலாகும்.

இயற்கை களைக்கொல்லி, செயற்கை களைக்கொல்லி ?

இயற்கை களைக்கொல்லி இயற்கையான பொருட்களைக் கொண்டு களைகளைக் கட்டுப்படுத்தும் முறையாகும். இதில் மாட்டு கோமியம் மற்றும் இதர தாவரப் பொருட்களை கொண்டு மற்றொரு தாவரத்தை கட்டுப்படுத்த உதவும். செயற்கை களைக்கொல்லி என்பது வேதிப் பொருளை பயன்படுத்தி களையை கட்டுப்படுத்தும் முறை.

களைக்கொல்லி பரிந்துரைக்கும் முன் கவனிக்க வேண்டிய காரணிகள் ?

  • நிலத்தில் என்ன பயிர் செய்யப்பட்டுள்ளது
  • நிலத்தில் என்னென்ன வகையான களைகள் பிரதானமாய் இருக்கின்றது
  • இந்த களைக்கொல்லியை எந்தப் பயிருக்கு பரிந்துரைக்கலாம்
  • இந்த களைக்கொல்லி எந்தெந்த களைகளைக் கட்டுப்படுத்தும்

என இவை நான்கையும் நன்கு பரிசீலனை செய்த பின்பே ஒரு களைக்கொல்லியை பரிந்துரைக்க வேண்டும்.

உதாரணமாக தற்போது நெல்வயல், அதன் களைகள் மற்றும் அதில் பயன்படுத்தும் களைகொல்லிகளை பற்றி காண்போம்.

  1. நிலத்தில் நெற்பயிர் என்று கண்டறிந்த பின்பு (இது எளிது அனைவரும் கண்டறிந்துவிடலாம்),

2.என்னென்ன (புல்வகைகள், அகன்ற இலைத் தாவரங்கள் அல்லது கோரை வகைகள்) களைகள் பிரதானமாக இருக்கின்றது என கண்டறிவதற்கு குறைந்தபட்சம் தாவரம் சம்பந்தப்பட்ட அறிவியல் தெரிந்திருக்க வேண்டும்.

  நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

  – திருவள்ளுவர்

வள்ளுவன் குறளுக்கு ஏற்ப என்னென்ன களை உள்ளது என்ன கண்டறிந்து, அந்தக் களைகளை கட்டுப்படுத்தும் வழிமுறையை பின்பற்ற வேண்டும்.

3.புல்வகை, அகன்ற இலைத் தாவரத்திற்கு, கோரைக் களைக்கு என்ன களைக்கொல்லி பயன்படுத்த வேண்டும் என கண்டறிந்து பரிந்துரை செய்வதற்கு உழவியல் துறை சார்ந்த வல்லுநர்கள் மிகவும் அவசியம்.

களைக்கொல்லியின் எதிர்மறைகள்?

என்ன களை நிலத்தில் நிலவுகிறது என்பதை அறியாமலேயே 2, 4 D பரிந்துரை செய்தால் களை கட்டுப்பாடு சிறப்பாக இருக்காது, அந்த வயலில் அகன்ற இலைத் தாவவரமின்றி புல்வகை அல்லது கோரை வகைகள் இருக்கும் பொழுது. செயற்கை களைக்கொல்லியாகிய ஃபெனோக்ஸாப்ரோப்-பி-எத்தில் 9.3 % EC (Fenoxaprop-p-ethyl) பயன்படுத்தும்போது புல் களையானது முழுமையாக நெல்வயலில் கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது, அகன்ற இலைத் தாவரத் களைகள் இருக்கும்பொழுது பயன்படுத்தினால் முற்றிலும் தவறானது. மேலே கண்ட இரண்டு களைக்கொல்லிகளையும் நெல் பயிர்களில் பயன்படுத்தக் கூடியதாகும். ஆனால் எந்த நிலை என்பது மிகவும் முக்கியமானது (அகன்ற இலைத்தாவரம்-2, 4 D;  புல் வகை தாவரம் – ஃபெனோக்ஸாப்ரோப்-பி-எத்தில் இருக்கும்பொழுது). எனவே களைக்கொல்லி எந்த பயிர்களுக்கு, எந்த களைகளுக்கு, எந்த தருணங்களில், எந்த நிலையில் என கண்டறிந்து மிகுந்த வல்லமையாக பரிந்துரைக்க வேண்டும்.

களைக்கொல்லியின் முக்கிய அம்சங்கள் ?

பயிர்களுக்கான களைக்கொல்லி மட்டும் தெரிந்திருந்தால் மிகையாகாது, அறிவியல் சார்ந்த நுட்பமும் தெரிந்திருக்க வேண்டும் அவ்வாறு தெரிந்து இருப்பவரே நல்ல களை மேலாண்மை தர இயலும்.

கட்டுரையாளர்கள்:

கோ.சீனிவாசன், முனைவர் பட்டப் படிப்பு மாணவர் (உழவியல் துறை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். மின்னஞ்சல்: srinivasan993.sv@gmail.com  அலைபேசி எண்: 9965503593

மு. ஜீவா, முதுகலை மாணவர் (உழவியல் துறை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். மின்னஞ்சல்: jeevamurugesan16@gmail.com அலைபேசி எண்: 8508716351

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news