Skip to content

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-5)

மாப்பிள்ளை சம்பா இட்லி:

தேவையான பொருட்கள்:

  • மாப்பிள்ளை சம்பா அரிசி 3 கப்
  • இட்லி அரிசி 1 கப்
  • உளுந்து 1 கப்
  • வெந்தயம் 1/2 ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை:

  • மாப்பிள்ளை சம்பா, இட்லி அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் கழுவி 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து 20-25 நிமிடங்கள் அரைத்து கொள்ளவும்.
  • மாப்பிள்ளை சம்பா மற்றும் இட்லி அரிசியையும் சேர்த்து 20-25 நிமிடங்கள் அரைத்து கொள்ளவும்.
  • இப்போது அரிசி மற்றும் உளுந்து் மாவையும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்க வைத்து கொள்ளவும்.
  • புளித்த பிறகு லேசாக கலந்து கொண்டு இட்லி தட்டில் மாவை ஊற்றி 10-15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
  • சுவையான மாப்பிள்ளை சம்பா இட்லி தயார். சட்னி அல்லது சாம்பார் உடன் சுவைக்கலாம்.
  • புளித்த மாவை லேசாக கலக்க வேண்டும். நன்று கலந்தால் இட்லி மிருதுவாக வராது.

-தொடரும்…..

கட்டுரையாளர்: ச .கண்ணன், வேளாண்மை அலுவலர் மற்றும் இயற்கை ஆர்வலர், மயிலாடுதுறை. அலைபேசி எண்-9965563563.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news