Skip to content

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-4)

வாழைப்பூ மாப்பிள்ளைச் சம்பா அடை

என்னென்ன தேவை?

  • வாழைப்பூ (நறுக்கியது) – 1 கப்
  • குதிரைவாலி அரிசி, மாப்பிள்ளைச் சம்பா புழுங்கல் அரிசி – தலா  1 கப்
  • கடலைப் பருப்பு – 1 கப்
  • உளுந்து, பாசிப் பருப்பு – தலா அரை கப்
  • மிளகாய் வற்றல் – 10
  • தேங்காய்த் துருவல் – அரை கப்
  • பெருங்காயம் – 2 டீஸ்பூன்
  • வெங்காயம் – 2
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • உப்பு, தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
  • கறிவேப்பிலை – சிறிது

எப்படிச் செய்வது?

  • பருப்பையும் மாப்பிள்ளைச் சம்பா அரிசி வகைகளையும் ஊறவைத்து அவற்றுடன் உப்பு, மிளகாய், தேங்காய்த் துருவல், சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.
  • வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, வேகவைத்த வாழைப்பூ ஆகியவற்றைப் போட்டு வதக்குங்கள்.
  • இவற்றை மாவில் சேர்த்துக் கலக்கி, அடையாக ஊற்றுங்கள். சுற்றிலும் தேங்காய் எண்ணெய் ஊற்றித் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுங்கள்.
  • சுடச்சுட சுவையான வாழைப்பூ மாப்பிள்ளை சம்பா அடை தயார். இதை உண்ணும் போது உங்கள் குடும்பத்தாரின் உடல் நலனும் மேம்படும்.

கட்டுரையாளர்: ச .கண்ணன், வேளாண்மை அலுவலர் மற்றும் இயற்கை ஆர்வலர், மயிலாடுதுறை. அலைபேசி எண்-9965563563.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news