களஞ்சியத்தில் தானியம் எடுக்க நாள் : மருத்துவர் பாலாஜி கனகசபை

0
459

 

வருகின்ற வாரமதிற் சனி வியாழன்
மகிழ்துதிகை திரிதிகையு மேகா தேசி
பெருகின்ற பஞ்சமியுந் திரயோ தேசி
பிரியமுள்ள பூரணையுந் தசமியாகும்
தருகின்ற அசுபதியும் புனர்பூ சந்தான்
தகு மிருகசீரிடம் ரேவதி அவிட்டம்
உருகின்ற முப்பூரம் ஓணம் பூசம்
உத்திரங்கள் மூன்றதுவு முதவு நாளே.

உதவுமஸ்தம் பரணிரோ கணியுஞ் சோதி
உற்றதிரு வாதிரையு மனுஷ மூலம்
இதமான கன்னியொடு மிதுனம் மீனம்
இடப் மொடு துலாந்தனுசு சிம்மந் தன்னிற்
பதமாகக் களஞ்சியத்தைத்தான் திறந்து
பாவைசுமங் கலைகையா லெடுக்கச் சொல்லி
சதமாக வேண்டியதை யெடுத்த பின்பு
தான்பெருகுந் தானியங்கள் மிகவுந் தானே.

வியாழன், சனி ஆகிய நாட்களில்
திதிதை, திரிதிகை, ஏகாதசி , பஞ்சமி, திரியோதசி , பவுர்ணமி , தசமி ஆகிய திதிகளில்
அஸ்வினி, புனர்பூசம், மிருக சீரிடம், ரேவதி, அவிட்டம், பூரம், பூராடம், பூரட்டாதி, பூசம், உத்திரம், உத்திரட்டாதி, உத்திராடம், அஸ்தம், பரணி, ரோகிணி, திருவாதிரை, அனுசம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில்
கன்னி, மிதுனம், மீனம்,ரிசபம், துலாம், தனுசு, சிம்மம் போன்ற லக்கினங்களில் களஞ்சியத்தில் இருந்து தானியத்தை எடுத்தால் தானியம் மேலும் பெரும் என்பது சித்தர் வாக்கு

மருத்துவர் பாலாஜி கனகசபை
அரசு மருத்துவர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
99429 22002

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here