Skip to content

உடலுக்கு பலம் சேர்க்கும் பொன்னாங்கண்ணி ; மருத்துவர் பாலாஜி கனகசபை

(Alternanthera Sessiles).

பொன்னாங்கண்ணியில் உள்ள சத்து விபரங்கள்
http://nutrition.agrisakthi.com/detailspage/PONNANGANNI/123

பயன்கள்

பொண்ணாங்கண்ணியானது பண்டைய காலத்தில் இருந்து இந்திய நாட்டில் மிகவும் பயன்பாட்டில் உள்ள மருத்துவ குணம் கொண்ட கீரையாகும்

பொன்னாங்கண்ணி கீரைை உண்டால் உடலே பொன்நிறமாக மாறும் என்பது சித்தர்கள் வாக்கு. உடல் பலம் பெறும் , இந்த கீரை ஒரு காயசித்தியாகவும் பயன்படுகிறது

பொன்னாங்கண்ணி கீரை இருக்கும் விட்டமின் ஏ , கண்ணில் உள்ள குறைபாடுகளை நீக்கி, கண்ணுக்கு ஔி தருகிறது. பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து உண்டு வந்தால் விழித்திரை நோய், கண் எரிச்சல், கண் மங்குதல், கண் வலி ஒற்றை தலைவலி போன்றவை நீங்கும். அதிக சுரம், வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் இக்கீரையை சூப்பாக அருந்தினால் இது Anti diarrhoea, antipyretic ஆக செயல்பட்டு குணப்படுத்தும், தாய்மார்களுக்கு நன்கு பல்சுரக்கச்செய்யும், குடலில் ஏற்படும் இரணங்களை விரைந்து ஆற்றும், கல்லீரலை நன்கு பலப்படுத்தி காமாலை போன்ற தொற்றுக்களை வராமல் பாதுகாக்கும் மேலும் நோய் எதிர்ப்பு திறனை நம் உடலுக்கு அதிகமாக்கிக்கொடுக்கிறது, அதோடு ஜீரண மண்டலத்தை உடலில் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.

அதோடு செல்களின் வளர்ச்சிதை மாற்றத்தை சரி செய்து வயோதிகத்தினை தள்ளிப்போடும், மூலம், மலச்சிக்கல் போன்றவற்றையும் சரி செய்கிறது

காசம் புகைச்சல் கருவிழி நோய் வாதமனற் கூசும்பி லீகங்கு தாங்கும் நோய்-போபியா லென்னங்கா ணிப்படிவ மேமமாஞ் செப்பலென்னைப் பொண்ணுங்க ணிக்கொடியைப் போற்று.
சித்தர் பாடல்

சித்த மருத்துவத்தில் பயன்கள்
விழித்திரை நோயைப்போக்கும், கண்ணொளி கொடுக்கும், வாத தோசத்தினை நீக்கும்,. பீனிசம் , மூக்கடைப்பு (sinusitis) நோயை போக்கும்.

மூலரோகம், பித்தப்பை, கல்லீரலை பலப்படுத்தும், மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் , காய்ச்சலை சரி செய்யும், உடல் சூடு மற்றும் உடல் நஞ்சுக்களை நீக்கும்

குடல் தொற்று மற்றும் புழுக்களை வெளியேற்றும், ஆண்களுக்கு ஏற்படும் விந்து ஒழக்கை சரி செய்யும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும், உடல் வெப்பத்தைத் தணிக்கும்

உபயோக்கும் முறை

துவையலாகச் செய்து தினமும் உண்டு வரலாம்.
கீரையாகக் கடைந்து தினமும் உண்டு வரலாம்
பொன்னாங்கண்ணி கீரையை நல்ல எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு, கண் ரோகம், ஒற்றைத்தலைவலி அனைத்தும் நீங்கும்
மேலும் பொன்னாங்கண்ணி கீரையை நெய்விட்டு வதக்கி கண்ணில் ஒத்திவந்தால் கண் சம்பந்தமான நோய்கள் நீங்கும். மேலும் இந்தக்கீரையை தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் அல்லது நீடித்து உண்டு வந்தால் உடல் தேஜஸ்ம் , கண் ஒளியும் உண்டாகும், பகலில் கூட நட்சத்திரத்தினை காண முடியும் என்பது சித்தர்கள் வாக்கு

மருத்துவர் பாலாஜி கனகசபை
அரசு மருத்துவர்
கிருஷ்ணகிரி
99429-22002

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj