அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 6ம் ஆண்டில்

0
527

4வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தது, சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை வழங்கினார். விரைவில் வானகம் வந்து சந்திக்கச்சொன்னார். நிறைய தகவல்களை நுட்பம் வழியாக அனைவரிடமும் சேர்க்கவேண்டும் என்றும் சொன்னார்.

ஆனாலும் அதற்குபின் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளால் விவசாயம் மென்பொருள் பற்றி சோதித்தே பார்க்க முடியவில்லை. இப்போதுதான் அதற்கான நேரம் அமைந்ததா என்று தெரியவில்லை. ஆனாலும் முதற்கட்டமாக விவசாயத்திற்கு என்று தனியான ஒரு குறுஞ்செயலியை உருவாக்கி வெளியிட்டுள்ளோம்.
நுட்பம் உருவாக்குவது மட்டுமே எங்கள் பணி. இந்த விவசாய மென்பொருள் தொடர்ந்து இயங்கவேண்டும். பலராலும் பயன்படுத்தப்படவேண்டும் என்று விரும்பினோம்.

நம்மாழ்வாரின் முதலாம் நினைவுநாளில் இந்த குறுஞ்செயலியை வெளியிட்டு அவரின் நினைவாகவே வெளியிட்ட விவசாயம் செயலி இன்று 6ம் ஆண்டில் அடி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
தொடர்ந்து எங்களுடன் பயணிக்கும், ஆதரவளிக்கும் அனைவருக்கும் உங்கள் நன்றிகள்!!
வெளிவரும்,,, பல புதிய செய்திகளுடன், புதிய மாற்றங்களுடன்

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

உழவி
5 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கில மொழியுடன் சேர்த்து மொத்தமாக 6 மொழிகளுடன் உலகம் முழுதும் பணியாற்றிட உழவி தயாராகிவருகிறது. தற்போது அதன் சோதனைப்பதிப்பு செயல்பட்டுவருகிறது…..

https://play.google.com/store/apps/details?id=com.agrisakthi.uzhavi

உணவு சத்துப்பட்டியல்

அக்ரிசக்தியின் விவசாயம் செயலி விவசாயம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிப்பணிகளை செய்வது நீங்கள் அறிந்ததே, அதனடிப்படையில் இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுப்பொருட்களின் சத்துப்பட்டியல் விபரம் கொண்ட களஞ்சியத்தினை அக்ரிசக்தி உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் நம் மண்ணில் உற்பத்தியாகும் விவசாயப்பொருட்களின் சத்து விபரங்களை தெரிவித்துக்கொள்ளலாம். நம் பாரம்பரிய அரிசிகளுக்கான சத்து விபரங்களை தற்போது தொகுத்து வருகின்றோம். விரைவில் அந்த விபரங்களையும் வெளியிடுவோம்

உணவுப்பொருட்களின் சத்து விகிதம் குறித்து காண இந்த இணைப்பினை சொடுக்கவும்

http://nutrition.agrisakthi.com/

நன்றி : பேலியோ மருத்துவர் திரு.அருண்குமார் Arun Kumar அவர்கள்

களம்
தமிழகம் முழுதுமுள்ள விவசாய சந்தைகளில் உள்ள விவசாயப்பொருட்களின் விலை நிலவரம், ஆறுகளில் உள்ள நீர் மட்டம், மழைப்பொழிவு குறித்த விரிவான விபரங்கள், அது குறித்த செயலிகள், விதைகள் கிடைக்குமிடம் உட்பட பல உபயோகமுள்ள வசதிகளுடன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது….

விவசாயப்பயிற்சிகள்
நஞ்சில்லா வேளாண்மையுடன் கூடிய விவசாயப்பயிற்சிகளும் விரைவில் வழங்கப்பட உள்ளது.

அத்தனை சிறப்பம்சங்களுடன் ஆடிமாதத்தில் விவசாயம் செயலியின் முழுமையான செயலி வெளிவர இருக்கிறது

5 வருடங்களாக ஆதரவு கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி!

இந்த செயலிகளை மேற்கொண்டு செயல்படுத்திட எங்களுக்கு மேற்கொண்டு நிதி தேவைப்படுகிறது. எனவே முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வந்தாலும் வரவேற்கின்றோம்.மேலும் விபரங்களுக்கு editor.vivasayam(at)gmail.com

நன்றி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here