கருத்துக்களம்

விவசாயம் சார்ந்த தொழில் செய்ய ஆசையா? – அக்ரிசக்தியின் யோகம்

6 லட்சம் கிராமங்களுக்கு மேல் அடங்கியுள்ள இந்தியாவில் அதிகப்படியானோர் செய்யும் தொழில் விவசாயம் மட்டுமே. உலகின் இரண்டாவது அதிகப்பட்ச மக்கள் தொகை உள்ள நம் நாட்டில் அனைவருக்கும் உணவிட வேண்டுமெனில் நம்மிடையே விவசாயம் சார்ந்த புதுப்புது தொழில்நுட்பங்களுக்கும், விவசாயம் சார்ந்த தொழில்முனைவுகளை உருவாக்குவது மிக அவசியம்.

அக்ரிசக்தியின் சார்பில் விவசாயம் சார்ந்த பல முன்னெடுப்புகள் செய்யப்பட்டுவருகின்றன. விழுது மாணவ பத்திரிக்கையாளர்கள் திட்டம், டயல் பார் அக்ரி, உணவு சத்து விபரங்கள் என பல ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் புதியதாக யோகம் என்ற திட்டத்தினை புதியதாக ஆரம்பிக்கின்றோம்

அக்ரிசக்தியின் விவசாயம் குழுமம் -யோகம் திட்டத்தில் விவசாயம் சார்ந்த புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கிடஉள்ளது.
விவசாயம் சார்ந்த சிறுதொழில்கள் என்னவாக இருந்தாலும் சிறிய அளவில் ஆரம்பித்திட
உங்களுக்கு நாங்கள் சிறு முதலீடாக ரூ.1000 கொடுக்கொறோம், நீங்கள் அதைப் பெற்றுக்கொண்டு ஆரோக்கிய உணவுகள், பண்டைய கால உனவுகள், உணவு மதிப்புக்கூட்டி விற்றல், ஆரோக்கியமான தின்பண்டங்கள், நஞ்சில்லா விவசாயம் மூலம் உருவாகும் பொருட்களை வாங்கி விற்றல், விவசாயப்புத்தகத்தினை வாங்கி விற்றல் என விவசாயம் தொடர்பான எல்லா தொழில்களையும் நீங்கள் செய்யலாம்

சிறு முதலீடு முதலில் சிறியதாக இருந்தாலும் இத்தொழிலை மேற்கொண்டு செய்ய தேவையான தொழில்நுட்ப உதவி , சமூக வலைத்தளங்களின் சந்தைப்படுத்துதல் என பல பயிற்சிகள் நாங்கள் கொடுக்க உள்ளோம். இம்முதலீட்டை சரியான முறையில் செய்தால் பெரிய முதலீடுகளையும் பெற்றுத்தர உதவுகிறோம்.

இந்த திட்டத்தில் பங்கெடுக்க நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் சுய விபரங்கள் மற்றும் நீங்கள் செய்யவிரும்பும் தொழில்பற்றிய விபரங்களோடு editor.vivasayam@gmail.com எங்களை தொடர்பு கொள்ளுங்கள், எங்கள் குழு உங்களை தொடர்புகொண்டு பேசி உங்கள் திட்டம் சரியானதென்றால் உடனே பணம் அனுப்பிவைக்கப்படும், 90 நாளுக்குப் பின் நீங்கள் அந்தப் பணத்தினை திருப்பிக்கொடுத்தால் போதும்

உங்கள் திட்டங்களை editor.vivasayam@gmail.com  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்

நிபந்தனை
உங்கள் ஊரில் இருந்து மூன்று நபர்கள் உங்களை பரிந்துரைக்க வேண்டும்விவசாயம் தொடர்ந்து ஆரோக்கியமாக பயணிக்க நாமனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணமிது.

இத்திட்டம் மேலும் வளர உங்கள் ஆலோசனைகளை எங்களுக்குத் தெரியப்படுத்தலாம்,

வாருங்கள் உங்களுடன் நாங்களும், எங்களோடு நீங்களும் வளரலாம்…….

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படிக்கப்பட்டவை

To Top