Skip to content

டி.கே.எம்-13 ரக நெல் சாகுபடி

ஒரு ஏக்கரில் டி.கே.எம்-13 ரக நெல்லைச் சாகுபடி செய்வது குறித்து ஸ்டீபன் ஜெபகுமார் கூறுகிறார். இங்கே,
இந்த நெல் சாகுபடிக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. பயிரிடப் போகும் நிலத்தில் 7 லோடு டிராக்டர் எருவை (ஒரு லோடுக்கு ஒன்றரை டன் எரு) கொட்டிக் கலைத்துவிட வேண்டும்.

சணப்பை விதைகளை விதைத்து, பூவெடுத்ததும் மடக்கி 2 சால் உழவு ஓட்டிவிட வேண்டும். மீண்டும் 2 சால் உழவு ஓட்டி, ஏற்கனவே தயாராக இருக்கும் நாற்றுகளைப் பறித்து நடவு செய்ய வேண்டும். 3 வது நாள் உயிர்த்தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறகு காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் கொடுத்துவந்தால் போதும்.
10வது நாள் ஏக்கருக்கு 5 கிலோ அசோலாவைத் தூவ வேண்டும். 15வது நாள் அசோஸ் ஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா கலந்த 5 கிலோ நுண்ணுயிர் உரத்தைத் தூவ வேண்டும். 15-ம் நாள் மற்றும் 30-ம் நாளில் பஞ்சகவ்யாவை ஒரு டேங்குக்கு 300 மில்லி என்ற கனக்கில் 5 டேங்க் தெளிக்க வேண்டும். இதைப் பாசனநீரிலும் கலந்துவிடலாம். 20 மற்றும் 40 ம் நாள்களில் களையெடுக்க வேண்டும்.

மீன் அமினோ அமிலத்தை ஒரு லிட்டருக்கு 2 மில்லி என்ற கணக்கில் மாலைவேளையில் 20 மற்றும் 45-ம் நாளில் தெளிக்க வேண்டும்.பூச்சித்தாக்குதலுக்குப் பொன்னீம் பூச்சிவிரட்டியைத் தெளிக்க வேண்டும். 120-லிருந்து 135-வது நாளுக்குள் அறுவடைக்கு வந்துவிடும்.

நெல்லானது பொன்னிறத்துக்கு மாறும்போது, நெல்லின் உமியை நீக்கி பார்த்தால், அரிசியானது கெட்டியாக மாறி இருந்தால் , அறுவடை செய்யலாம். டி.கே.எம்-13 ரக அரிசி பொன்னி அரிசி போன்றே சாப்பிட நன்றாக இருக்கும்.
நன்றி
பசுமை விகடன்

4 thoughts on “டி.கே.எம்-13 ரக நெல் சாகுபடி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj