தேசிய வேளாண் சந்தை திட்டம் தமிழகத்திற்கு பயனிக்கிறதா?

0
2557

தேசிய வேளாண் சந்தை திட்டம் ஏப்ரல் 2016 ல் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக விவசாயிகள், தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு, எங்கு அதிக விலை கிடைக்கிறதோ, அங்கு விற்பனை செய்யக் கூடிய வகையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு முழுதும் 585, ஒழுங்கு முறை விற்பனை நிலையங்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இணையம் மூலம் இணைக்கப்படும். விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை ஏலம் விடலாம். அதிக விலைக்கு ஏலம் எடுப்போருக்கு, பொருட்களை விற்பனை செய்யலாம்.

இத்திட்டத்தில் 25 பொருட்கள் விற்பனை செய்ய முடியும்.கோதுமை, அரிசி, பருப்பு வகைகள், பருத்தி, நிலக்கடலை, தானிய வகைகள், கடுகு, புளி, மஞ்சள், வெங்காயம், உருளைக்கிழங்கு, ஆப்பிள் உட்பட, 25 பொருட்களை விற்க முடியும். இதனடிப்படையில் தமிழகத்தில் இதுவரை 2 சந்தைகள் தேசிய வேளாண் சந்தையை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டன

தமிழகத்தில் இதுவரை 2 சந்தைகள் *  தேசிய வேளாண் சந்தையை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டன , வேலூர் மாவட்டம் வாலாஜா வட்டத்தில் உள்ள அம்மூர் பேரூராட்சியில் இத்திட்டம் தமிழத்தில் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்டது, அதன்பின்னர் திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆரம்பிக்கப்பட்டது
தமிழகத்தில் தேசிய வேளாண் சந்தை ஆரம்பிக்கப்பட்டாலும் விவசாயிகளுக்கு இது பயளினக்கிறதா? இத்திட்டம் ஆரம்பித்ததன் நோக்கம் பூர்த்தியாகியுள்ளதா ? என்பது கேள்விக்குறியே?

அதே சமயம் தமிழகத்தில் உள்ள 278 அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை தேசிய வேளாண் சந்தைகளாகக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயி்களும் இத்திட்டத்தினால் பயனடைந்துள்ளதாக இருந்தாலும் தெரிவிக்கலாம், ஏனெனில் இதுபோன்ற தி்ட்டங்கள் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டாலும் முறைப்படி செயல்படுத்தப்படுகிறதா என்பது பெறும் ?

எனவே வேலூர் மாவட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள் ளநண்பர்கள் யாரேனும் இத்திட்டத்தின் செயல்பாடு பற்றி எங்களுக்கு அனுப்பினால் அச்செய்தியை வெ ளியிடுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்
நன்றி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here