Skip to content

அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல்

அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல் வெளியீடு. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு.மாஃபா பாண்டியராஜன் மற்றும் திரு.ராஜன் நடராஜன் ஆகியோர் வெளியிட இயக்குநர் திரு.பாக்கியராஜ் மற்றும் திருமதி.பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

தை பொங்கலைக் கொண்டாடி மகிழ்வும், தமிழர்களின் சிறப்புகளைச் சொல்லி, ஆடிப்பாடி  துள்ளல் நடனமாடி மகிழ ஒரு பாடல் இல்லை என்ற குறையை போக்கும் வகையில்,  அமெரிக்காவின் நியுஜெர்சி வசந்த் வசீகரனின் VSharp  இசைக்குழு இசையமைத்து வலைத்தமிழ்.காம் மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து ஒரு பாடல் தயாரானது..   இதை வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா மேடையில் 20-1-2017, சனிக்கிழமை அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக் கழகத்துடன் பேச்சுவார்ந்தை நடத்த வந்திருந்த  தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு.மாஃபா பாண்டியராஜன் மற்றும் மேரிலாந்து மாகாணத்தின் போக்குவரத்து ஆணையர் மற்றும் முன்னாள் மேரிலாந்து வெளியுறவுத்துறை துணைச்செயலர் டாக்டர் ராஜன் நடராஜன்   ஆகியோர்  வெளியிட இயக்குநர் திரு.பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

https://www.youtube.com/watch?v=o_nv_JhQXbk

இந்தப் பாடலை  நியுஜெர்சியிலிருந்து  மணிகண்டன் ஆனந்தராஜ் தலைமையில் வாசிங்டன்  பகுதியைச் சார்ந்த  ச.பார்த்தசாரதி, நித்திலச்செல்வன் முத்துசாமி, யோகராஜ் சொக்கலிங்கம், மகேந்திரன் பெரியசாமி, ராஜேஷ் சுவாமிநாதன், ராஜாராம் சீனுவாசன், ஐயப்பன் ராமன் ஆகியோர் இணைந்து பாடலுக்கான வரிகளை எழுதினர்.  இதற்கு வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தை சார்ந்த 25க்கும் மேற்பட்டோர் நடனமாடி காணொளியாக  சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. இதை www.youtube.com/watch?v=o_nv_JhQXbk  -ல்  காணலாம். இதை முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில்  #pongalsong,  #thaithaipongalu  ஆகிய Hashtag -ல் வைரலாகி வருகிறது .

 

இந்த இசை, இளைய தலைமுறையை கவரும் வகையில், நம் பொங்கல் திருவிழா, உழவர்களின் பெருமை, மெரீனா சல்லிக்கட்டு தை எழுச்சி, பொங்கல் விழாவிற்கு அமெரிக்காவின் வெர்சீனியா மாகாண அங்கீகாரம், முடியும் தருவாயில் இருக்கும் ஹார்வார்ட் தமிழ் இருக்கை ஆகிய அனைத்து பெருமைகளையும் சொல்லி, காலத்திற்கும் பொங்கலுக்காக நடனமாடி மகிழும் வகையில் இந்தப்பாடல் வெளிவந்து சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்படுகிறது ..

இந்தப் பாடலின் தேவையை உணர்ந்து, இதை  ஒருங்கிணைத்த திரு.ச.பார்த்தசாரதி அவர்கள் குறிப்பிடுகையில்,  வலைத்தமிழ்.காம்  கடந்த ஆண்டு தமிழில் பிறந்தநாள் பாடல் இல்லையே என்ற குறையைப் போக்க,  கவிஞர் அறிவுமதி அவர்கள் எழுதி, திரு.அரோல் காரொலி இசையமைத்து, திரு. உன்னிகிருஷ்ணன்  மற்றும் செல்வி உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடி ஒரு சிறந்த பாடலை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க மேடையில் வெளியிட்டோம்(  ) . அது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இன்று ஒவ்வொருவர் வீட்டிலும் பயன்பாட்டில் இருக்கிறது .   அதுபோல் பொங்கல் என்றால் ஓரிரு திரைப்படப் பாடல்களை மட்டுமே நாம் பயன்படுத்தும் சூழல் உள்ளது . இந்த ஆண்டு ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமையும் தருவாயில் இருப்பதாலும், அமெரிக்காவின் முதல் மாகாணமாக வெர்சீனியா மாகாணம், ஒவ்வொரு ஆண்டும் சனவரி 14, பொங்கல் தினமாகக் கொண்டாட அரசு அங்கீகாரம் அளித்திருப்பதாலும், வரலாற்று சிறப்புமிக்க  சல்லிக்கட்டு நிகழ்ந்து ஓர் ஆண்டு நிறைவடைவதை ஒட்டி அதன் நினைவாகவும் ஒரு பாடல் கொண்டுவரவேண்டும் என்று வசந்த் வசீகரன்  அவர்களுடன் என் விருப்பத்தை தெரிவித்தோம். இதற்காக நேரம் ஒதுக்கி ஒரு நல்ல இசையை கொண்டுவந்தார். இந்த முயற்சியை  வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து , வலைத்தமிழ்.காம் ஒருங்கிணைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க மேடையில் வெளியிடப்பட்டது வெளியிட்டது.  இது உலகின் அனைத்து தமிழர்களும் தங்களின் நீண்டநாள் விருப்பம் நிறைவேறியதை ஆடிப்பாடி பொங்கலை கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் ஏற்கனவே பல தமிழ் சங்கங்கள்அவர்களின் செய்திமடலில் பகிர்ந்து வருகிறார்கள் என்பதும் தமிழில் நல்லவற்றிக்கு அனைவரும் கொடுக்கும் ஆதரவு நம்பிக்கையளிப்பதாக தெரிவித்தார்.

நன்றி!.

வலைத்தமிழ்.காம்

தமிழ் தகவல் களஞ்சியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj