நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டில்கள் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு!

0
1272

பிலாஸ்டிக் பாட்டில்களின் அடியில் முக்கோன வடிவமிட்டு அதன் உள்ளே ஒரு எண் இருக்கும். (“Resin identification code” – 1 முதல் 7 வரை) இந்த எண் அந்த பிலாஸ்டிகின் தரம், அதில் பயன்படுத்தப்பட்ட பாலிமர்(Type of polymer) தரத்தை குறிக்கும்.

தண்ணீர் கொண்டு செல்ல நாம் வாங்கும் பிலாஸ்டிக் பாட்டில்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை?

நீங்கள் தண்ணீர் கொண்டு செல்லும் பிலாஸ்டிக் பாட்டிலின் கீழே உள்ள எண் 5 முதல் 7 வரை (Food grade plastics) இருந்தால் நிச்சயம் உங்கள் நீரும், அதை குடிக்கும் உங்கள் ஆரோக்கியமும் பாதுகாப்பாக உள்ளது. காரணம் 1- 4 வரை எண் உள்ள பாட்டில்கள் உணவு எடுத்து செல்லும் தகுதி உடையவை அல்ல. 5 – 7 வரை உள்ளவை மட்டுமே உனவு கொண்டு செல்லும் தரம் உடையவை.

எப்படி பார்த்து வாங்க வேண்டும்?

உணவு பொருட்கள் கொண்டு செல்லும் பிலாஸ்டிக்குகள் (தண்ணீர், உணவு, பழம், காய்கறிகள் எதுவாக இருந்தாலும் சரி) எப்போதும் 5 – 7 வரை எண் கொண்ட பிளாஸ்டிக்கா என பார்த்து வாங்குங்கள்(Food Grade Plastic).

உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

1 – 4 எண் கொண்டவை உணவு கொண்டு செல்ல தகுதியானவை அல்ல. அவை வெப்ப சூழல் மாறும் போது கார்சினோஜென் (Carcinogens) எனப்படும் ஒன்றை வெளியிடுவதால் அதில் உள்ள உணவை உண்பவருக்கு புற்றுநோய் (Cancer) ஏற்பட காரணமாகிறது.

பெரும்பாலும் பிளாஸ்டிக்பாட்டில்கள் 90% No.1 or maximum No.3 வரை தான் இருக்கும். அவைகளை மறுபடி நீர் ஊற்றி குடிக்க அல்லது வீட்டுதேவைக்கான பொருட்களை சேர்த்து வைக்க பயன் படுத்த கூடாது.

பிளாஸ்டிக் பாட்டில்கல் மறு சுழற்சிப்படுத்தப்படும் போது ஏழு குறியீடுகள் தரப்ப்டுகிறது.

பாட்டிலின் கீழ் இருக்கும் முக்கோணத்தில் ஒன்று எனும் குறியீடு காணப்பட்டால் அது பெட் என அழைக்கப்படும்.அது பாலி… எதிலின் டெரே பித்ட்லேட்டால் தயாரிக்கப்பட்டிருக்கும்.

அதில் [* பிஸ்பினால் ஏ] பி. பி. ஏ இரசாயனம் உள்ளது. இந்த பி. பீ, ஏ இரசாயனம் பயன் படுத்தி தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்குகளை தொடர்ந்து பாவிக்கும் போது கல்லீரல்பாதிப்பு, கணையத்தில் செயல்பாடுகளில் பாதிபு, தைராய்டு பிரச்சனைகள் போன்றவை வரலாம்.

அதிகளவில் பிளாஸ்டிக் பட்டிலகளை மீண்டும் மீண்டும் பயன் படுத்துவதனால் இதய நோய் நீரழிவு நோய்,வரும் வாய்ப்பு அதிகமே..

நிஷா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here