Skip to content

மேம்படுத்தப்பட்டுள்ள அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி

அனைவருக்கும் வணக்கம்

அக்ரிசக்தியின் விவசாயம் செயலி ஜூலை மாதத்திற்குப் பிறகு நேற்று மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நம்மாழ்வாரை சந்தித்தபின் கருவாகி, உருவான செயலி இப்போது பெரிய மாற்றத்தினை ஏற்படுத்திவருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த மேம்படுத்தப்பட்டுள்ள புதிய செயலியில் நீங்கள் பதிவு செய்தபின்னரே செயலியில் உள்ள செயலிகளைபார்க்க முடியும். ஆனால் இதனை நாங்கள் வெளியில் யாருக்கும் கொடுக்க மாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம்.

  • காணொளி வசதி
  • செய்தியில் இனி குரல், காணொளி வசதியையும் பயன்படுத்தலாம்.
  • விவசாயம் செயலியை இனி இணையமில்லாமலும் பயன்படுத்தலாம்
  • வாங்க விற்க பகுதியில் இணையம்வழியாக நேரடியாக விவசாயிக்கே பணம் செல்லும் வசதியையும் செய்துள்ளோம்.
  • விளம்பரங்களை அதிகப்படுத்தியுள்ளோம்

 

விவசாயத்தில் வௌியிடப்படும் சில தகவல்கள் பெரும் ஆய்வுக்குப் பின்னரே வெளியிடப்படுகின்றன. அதோடு சில ஆய்வுகளை நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம்.

  • ஆற்று மணலிருந்து இருந்து விவசாயம்
  • சிறிய நஞ்சில்லா பூச்சிமருந்துகள்
  • சிறிய விவசாயிகளுக்கு சிறிய அளவிலான நிதி வசதி
  • மாடிவீட்டுத்தோட்டப்பயிற்சிகள்
  • விவசாயிப்பொருட்களை உதவிடும் வகையில் குளிர் பதன கிடங்கு
  • விவசாயம் வளர செய்யவேண்டியதற்கான செயல்பாடுகள்
    என்று நாங்கள் விவசாயத்திற்காக செயல்பட்டு வருகிறோம்.

வரும் புத்தாண்டில் இருந்து இன்னமும் அதிகப்படியான வசதிகளுடன் , அதிகப்படியான சேவைகளுடன் அதிகமான உழவு சார்ந்த ஆய்வுப்பணிகளுக்கான நிதி வசதியையும் செய்ய உள்ளோம், அதோடு மட்டுமல்லாமல் இன்னமும் பலபல புதிய விசயத்திற்காக நாங்கள் உங்களை தேடி வருகிறோம். ஆர்வமுள்ளவர்கள் எங்களுடன் இணையலாம்.

உழவே தலை!

என்றும் அன்புடன்
செல்வமுரளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj