Skip to content

எலுமிச்சைப் பழம்

தாவரவியல் பெயர்: ஓசுபேக்

தாயகம் : ஆசியா (பூக்கும் தாவரம்)

துணைப்பிரிவு : ரூட்டேசி

வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் வாழக்கூடியது.குறுஞ்செடித் தாவரமாகும் இது. அறு சுவைகளில் ஒன்றான புளிப்புச் சுவையினை கொண்டது.

எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம் குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழைக்கப்படுகிறது.

கையில் அடங்கும் எலுமிச்சைப் பழமும்

அடங்காத மருத்துவ குணங்களும்”

எலுமிச்சை பழத்தில் ”சிட்ரிக் அமிலம்” உள்ளது. இந்த செடிகள் நருமணம் கொடுக்கக் கூடிய செடியாக விளங்கக்கூடியது. அத்துடன் இவை புத்துணர்ச்சி கொடுக்க கூடியது. இவை ஏராளமான மருத்துவ குணங்களையும் கொண்டது. இலைகள், செடி, கிளையில், அனைத்திலும் எலுமிச்சை வாசனையை கொண்டது. இதைப்பற்றி இங்கு காண்போம்.

எலுமிச்சைப் பழத்தின் முக்கியத்துவம்:-

எலுமிச்சை இவை கோவில்கள், மற்றும் சித்த மருத்துவங்களுக்கு பயன்படுகிறது. அத்துடன் சமையலுக்கு பயன்படுகின்றன. எலுமிச்சை காய்கள் ஊறுகாய் போட பயன்படுகின்றன.

எலுமிச்சை பழம் இயற்கை உரமாகவும் பயன் படுகின்றது.இதில் சிட்ரிக் அமிலம் 5% – 6% உள்ளது. இதன் PH அளவு 2 முதல் 3 வரை இருக்கும் அதனால் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் அமிலமாக பயன்படுத்துகின்றனர்.

வருடம் முழுவதும் பலன் தரக்கூடியவையான எலுமிச்சைப் பழம்.

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்:-

  1. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது.

  2. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.

  3. உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில் உள்ளது.

  4. உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால் நலம் பெற‌லாம். சிறுநீர் அடைப்பு விலகும். உடல் நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும். கடல் உப்பினால் உப்பிய உடம்பு எலுமிச்சைச் சாறால் கட்ட‌ழகு மேனி பெறும். கனிகளில் மதியூக மந்தி‌ரி குணத்தை உடையது எலுமிச்சை.

  5. எலுமிச்சம் பழம் பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியைப் போக்கும், வாந்தியை நிறுத்தும், காலராக் கிருமிகளை ஒழிக்கும், பல் நோய்களை குணப்படுத்தும்.

  6. சர்ம நோய்களைக் குணப்படுத்தும், டான்சிலைத் தடுக்கும், விஷத்தை முறிக்கும், வாய்ப்புண்ணை ஆற்றும், தேள் கடிக்கு உதவும், மஞ்சக்காமாலையை நீக்கும், வீக்கத்தை குறைக்கும், வாயுவை அகற்றும், பசியை உண்டாக்கும், விரல் சுற்றிக்கு உதவும், யானைக்கால் வியாதியை குணப்படுத்தும்.

  7. எலுமிச்சம் பழம் நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள ப்யோபிளேன் என்ற சத்தில் உள்ளது. தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தைத் தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது.

  8. விளையாட்டு, ஓட்டப் பந்தயம், கடுமையான வேலை இவற்றால் ஏற்படும் களைப்பை நீக்க ஒரு எலுமிச்சப் பழத்தை எடுத்து உடனே கடித்துச் சாற்றையோ அல்லது பிழிந்து சர்க்கரை போட்டோ சாப்பிட்டால் உடனடி தெம்பு ஏற்படும். உண்ணாவிரம் இருந்து முடிப்போர் மீண்டும் உண்ணும்போது எலுமிச்சை பழச்சாறு அருந்திவிட்டு உணவு உண்டால் அஜீரணப் பிரச்சனைகள் நேர்வதைத் தடுக்கலாம்.

  9. இவை தலையில் பொடுகுப் பிரச்சனையிலிருந்து நீங்க எலுமிச்சை சாற்றை எடுத்து அவற்றை தலையில் தேய்த்தால் பொடுகு நீங்கும்.

  10. நச்சு முறிக்கும் மருந்தாக இது பயன்பட்டுள்ளது. பூங்காக்களில் அழகூட்ட பயன்பட்டது.

  11. கோடைக்காலங்களில் வெயில் சூட்டை தனிக்க கூடியவை வெயில்காலங்களில் வயிற்றுப்போக்கினை நிவர்த்தி செய்யும் தன்மையுடையது.

  12. கோடைக்காலங்களில் எலுமிச்சை பழம் சாதம் சமைத்து உண்பதினால் உடலுக்கு நன்மை தரக்கூடியவை

  13. கோடைக்காலங்களில் தலை வழி மற்றும் பொடுகு போன்ற பிரச்சனையில் இருந்து விடு பெற எலுமிச்சை சாற்றை தலைக்கு தேய்த்து குளிப்பதால் போன்றவற்றில் இருந்து விடுப்பெறலாம்.

  14. எலுமிச்சை பழத்தினை குளிர்பாணம் செய்து அருந்துவதினால் வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும்.

  15. வீடுகள் கழுவும்போது தண்ணீரில் எலுமிச்சை சாற்றை விட்டு கழுவதினால் கிருமினாசி போல செயல்பட்டு நோய்களை கட்டுப்படுத்தும்.

  16. எலுமிச்சை பழத்தினை மற்றும் உணவு, குளிர்பாணம் நுரையிரலில் உள்ள நோயினைக் கட்டுப்படுத்தும்.

  17. வெண்ணீரில், எலுமிச்சை சாற்றை விட்டு கைகளை கழுவதினால் கையில் உள்ள எண்ணெய்பசை மற்றும் கிருமினாசினிகளைக் கொள்ளும்.

  18. 30 நாட்களுக்கு மேல் எலுமிச்சையினை சாப்பிட்டால் உடல் நலத்திற்க்கு கேடு விளைவிக்க கூடியவை.

  19. எலுமிச்சை பழத்தினை அறுத்து நகத்தின் மீது தேய்த்தால் நகத்தில் உள்ள அழுக்கினை சுத்தப்படுத்தும்.

  20. கண்ணாடி குவளையில் தண்ணீர் விட்டு எலுமிச்சை பழத்தினை போடுவதினால் திருஷ்டி நீங்கப்பயன் படுகின்றது.

எலுமிச்சைப் பழத்தின் சாகுபடி:-

செம்மண் மற்றும் மாட்டுச்சாணம், மணல் மூன்றையும் கலந்து பூ தொட்டியில் நிரப்பவேண்டும்.பின்பு விதை, ஊன்றவேண்டும்.சிறிது நாட்கள் பின் சிறு செடியாக முளைக்கும் வளரத்தொடங்கும் போது 1 அடி குழிவெட்டி தொட்டியில் உள்ள செடியினை எடுத்து அதன் குழியினுள் இடம் மாற்ற வேண்டும். பின்பு தண்ணீர் ஊற்றி செடியினை வளர்க்கவேண்டும். முள் மற்றும் தலை, அதனுடன் கிளையும் அமைந்திருக்கும் செடியில் வெள்ளை பூக்கள் பூத்துக் குழுங்கியிருக்கும். பூக்கள் ஊதிர்ந்த பிறகு பச்சை நிறத்துடன் சிறும் பிஞ்சாக இருக்கும் பிறகு பழமாக மாறும் போது மஞ்சள் நிறமாக மாறிவிடும் அதனை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு செல்வார்கள். இவற்றை கிலோ மற்றும் எண்ணிக்கை கணக்கில் விற்பனை செய்யப்படுகின்றன. பூச்சிகள் தாக்கினால் புளிச்ச மோர் தெளித்தால் பூச்சி தாக்குதல் கட்டுப்படும்.

பக்க விளைவுகள்:-

தினமும் எலுமிச்சைப் பழம் எடுப்பதினால் பல் கூசும் வெட்டும் மற்றும் வாய் அசைக்கும் திறன் குறையும்.இதனால் உணவை எளிதில் எடுத்துக் கொள்ள முடியாது.சிறு நீர் கழிக்கும் பிரச்சனை தொடரும்.நெஞ்சு எரிச்சல் இருந்தால் நெஞ்சுவலியை தூண்டும்.எலுமிச்சைப் பழத்தினை வெறும் வயிற்றில் உண்பதால் வயிறு எரிச்சல் அதிகரிக்கும்.

இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

தொகுப்பு : பிரேமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news