Skip to content

தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 1

       தென் மாநிலங்களில் ஓடும் ஆறுகளில் முக்கியமானது தென்பெண்ணை. இது, கர்நாடக மாநிலம், சிக்கபல்லபூர் மாவட்டம் நந்தி மலையில் உற்பத்தியாகிறது. 112 கி.மீ., பயணம் செய்து, சிங்க சாதனப்பள்ளி வழியாக, தமிழக எல்லைக்குள் நுழைகிறது. பின், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில், 320 கி.மீ., பயணித்து, கடலூரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

        இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 கி.மீ2 ஆகும்.

         மார்கண்டநதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு இதன் முக்கிய துணையாறுகளாகும்

தென்பெண்ணை ஆற்று நீர் வீணாக கடலில் கலப்பு ;தடுப்பணைகள் கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

  • தருமபுரி மாவட்டம், எச்.ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர், தென்பெண்ணயாற்றில் சீறிப்பாய்ந்து செல்கிறது.

  • கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஒடுகிறது.

          கர்நாடகவிலிருந்து வரும் தென்பெண்ணை ஆற்று தண்ணீரை, தேக்கி வைக்கும் வகையில், 1995ல், தமிழக எல்லையான ஒசூர் அருகே கெலவரப்பள்ளி அணைகட்டப்பட்டது. இதில் 481 மில்லியன்கன அடித்தண்ணிரை தேக்கிவைக்க முடியும்.

         இந்த அணையில் இருந்து 21.99கி.மீ., நீளமுள்ள இடது கால்வாயும் வெட்டப்பட்டு, 2005 முதல்,பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள,22 கிரமங்களில், 8,000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.

அதிக மழை பெய்வதால் வேறு வழியில்லை:-

         திருவண்ணாமலை மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:

         சாத்தனூர் அணை கூட்டு குடிநீர் திட்டத்திற்கான நீர்த்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் அணை மண் தூர்வினால் ஏற்படும் நீர் இழப்பு போக, குறைந்த அளவே நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் ஏரிகளில் நிரப்பவும், பாசனத்திற்கும் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது.

        கடந்த, 2005க்கு பின், சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர், கடலில் கலக்கவில்லை. மழை அதிகமாக பெய்து, அதிக அளவு நீர் அணைக்கு வந்தால் மட்டுமே கடலில் கலக்கும் நிலை ஏற்படும்.

10 இடங்களில் தடுப்பணை:-

        கெலவரப்பள்ளி அணையில் நீர்நிரம்பும் போது, அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர், 60 கி.மீ., ஒடி, கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணையை வந்தடைகிறது. இடையில், 10 இடங்களில் தடுப்பணைக் கட்டப்பட்டுள்ளது. அதில் சேமிக்கப்பட்டும் நீரால், 1,083 ஏக்கர் பாசனம் பெறுகிறது. தென்பெண்ணை ஆற்றில் இருந்து, மருதாண்டப்பள்ளி ஏரி, துரை ஏரி ஆகியவற்றுக்கு கால்வாய் வசதி செய்யப்பட்டுள்ளது.

          ‘ஒசூர் சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுக்காவில் உள்ள ஏரிகளில், தென்பெண்ணை ஆற்று தண்ணீரை நிரப்ப வேண்டும்’ என, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலும் கூட, ஏரிகளுக்கு தண்ணீர் திரும்பி விடப்படுவது இல்லை.

         கிருஷ்ணகிரி கே.ஆர்,பி., அணை நிரம்பி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டால், காவேரிப்பட்டினம், நெடுங்கல் அகரம், இருமத்தூர் வழியாக தருமபுரி மாவட்டத்தில், 48 கி.மீ., பயணித்து, ஈச்சம்பாடி அணைக்கு தண்ணீர்செல்லும். கே.ஆர்.பி., அணையின் மொத்த கொள்ளளவு, 1,666 மில்லியன் கன அடியாகும். அணையின் மொத்த நீர்மட்டம், 52 அடி. அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாயில் பாசனத்திற்க்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வலதுபுற கால்வாய் கால் வேஹள்ளி, காவேரிப்படினம், பென்னேஸ்வர மடம், ஜெகதாப் வரை, 18.2 கி.மீ., வரை செல்கிறது.

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news