Skip to content

எலுமிச்சையைத் தாக்கும் பூச்சிகள்

எலுமிச்சை வண்ணத்துப்பூச்சி: பாப்பில்லியோ டெமாலியஸ்

வாழ்க்கை சரிதம்:

           அந்துப்பூச்சிகள் கருமை நிற இறக்கைகளில் மஞ்சள், வெண்மை கலந்த புள்ளிகளைக் கொண்டிருக்கும். அந்துப்பூச்சிகள் இளம் தளிர்களில் முட்டைகளை இடும். முட்டையிலிருந்து வெளிப்படும் புழுக்கள், பறவையின் எச்சம் போல் காணப்படும். வளர்ந்த புழுக்கள் பெரியதாக பச்சை நிறத்தில் கழுத்தில் மாலை போன்ற அடையாளத்துடன் காணப்படும். பின் இலைகளிலேயே கூட்டுப்புழுவாக மாறும். கூட்டுப்புழுவிலிருந்து அந்துப்பூச்சி வெளிவரும்.

சேத அறிகுறி:

         இப்பூச்சியின் புழுக்கள் இலைகள் முழுவதையும் கடித்து தின்றுவிடும்.

கட்டுப்பாட்டு முறைகள்:

        தாக்கப்பட்ட இலைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

இலை நுண்துளைப்பான் அல்லது இலைச்சுரங்கப்புழு: ஃபைல்லோக்நிஸ்டிஸ் சிட்ரெல்லா

வாழ்க்கைச் சரிதம்:

          அந்துப்பூச்சிகள் சாம்பல் நிற முன்னிறக்கையில் ஒரு கரும்புள்ளியுடன் காணப்படும். அந்துப்பூச்சிகள் இலைகளில் முட்டையிடும். முட்டையிலிருந்து புழு வெளிவரும். வளர்ந்த புழு கூட்டுப்புழுவாகி அந்துப் பூச்சி வெளிவரும்.

சேத அறிகுறி:

           இப்பூச்சியின் சிறிய புழுக்கள் இலைகளின் மேல் தோலுக்கும், அடித்தோலுக்கும் இடையில் சுரங்கம் போன்ற பாதையை எற்படுத்தி அதனுள் இருந்து பச்சையத்தை உண்டு வாழும். இதனால் இலைகள் சற்று சுருண்டு இருக்கும். மேலும் புழுக்கள் சென்ற துவாரம் வெண்மை நிறத்தில் வளைந்து வளைந்து செல்வதைக் காணலாம்.

கட்டுப்பாட்டு முறைகள்

1.தாக்கப்பட்ட இலைகளை அப்புறப்படுத்தி அழித்துவிட வேண்டும்.

2. வேப்பம் பிண்ணாக்கை ஊற வைத்த கரைசலை இலைகளின் மேல் தெளிக்கலாம்.

3.ஊடுருவும் பூச்சிக்கொல்லிகள் ஏதாவது ஒன்றைத் தெளிக்கலாம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news