Skip to content

விவசாயிகளின் வாழ்க்கையை நிமிர்த்தும் நேந்திரம்!

ஆயிரம் வாழை 80 ஆயிரம் லாபம்!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறைச் சேர்ந்த விவசாயி பொன்னப்பன் நேந்திரன் வாழை விவசாயத்தில் அசத்தி வருகிறார். அவ்வை ஏலாக் கரையில் வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வரிடம் பேசினோம்.

ஒணம் பண்டிகையின்போது மலையாளிகளுக்கு ஏத்தங்காய் சிப்ஸீம், உப்பேரி (சர்க்கரை வரட்டி)யும் இல்லைன்னா வெள்ளமே இறங்காது. உப்பேரின்னா வேறொண்ணும் இல்லை. நேந்திரங்காய் தோல் எடுத்து கொஞ்சம் கெட்டியான சிப்ஸாக கட் பண்ணி சர்க்கரை பாகில் முக்கி எடுக்கிறதுக்குப் பேரு தான் சர்க்கரை வரட்டி.

நேந்திரன் வாழையில் முதலில் கவனிக்க வேண்டியது கன்று தேர்வு செய்யுறதுதான். கன்று தேர்வில் கோட்டை விட்டால் அப்புறம் வாழையை நட்டு வளர்த்து பலனில்லாத, காய்களைத்தான் பெறவேண்டும். எனவே கன்று தேர்வு மிக முக்கியம். ஒரு வாழைக்கன்று 2 முதல் இரண்டரை கிலோகிராம்வரை எடை கொண்டதாக பார்த்து வாங்குவது நல்லது. கன்றை முன்னும் பின்னும் திருப்பிப்பார்த்தாலே அதன் அழகு தெரியும். கன்று வாங்கியபின்னர் சூடோமோனஸ் ஊக்கி, நோய் இல்லாமல் போவதற்கு பெவஸ்டின் கரைசலில் ஒரு நாள் மூழ்கும்படி வைத்திருந்து பின்னர் நடவு செய்யவும்.

ஒரு ஏக்கரில் ஆயிரம் வாழை வரை நடலாம். நாலுக்கு ஒரு அடி அகலத்தில் பாத்தி அமைக்கவேண்டும். ஒரு அடி ஆழ குண்டு வெட்டி சாணம் வேப்பம் புண்ணாக்குக் கலவை மிக்ஸ் செய்து கன்றை நடவேண்டும். 10 வது நாளில் இலை துளிர்க்கும்.

பத்து நாட்களுக்குப் பின்னர் யூரியா, பொட்டாஷ் அல்லது பாக்டம்பாஸ் உரம் போட வேண்டும். 2 மாதத்திற்குப்பின் 4 அடிஉயரத்தில் வாழை வளரும். ஆறாவது மாசத்துல பூ வரும். ஒன்பது முதல் பத்தாவது மாசத்துல காய் நல்லா பருமனானதும் குலையை வெட்டி எடுக்கலாம்.

நான் நேந்திரன் தோட்டத்தை பராமரிக்கிற முறையைச் சொல்லிடுறேன்.

செடி வளர்ந்து வர்றப்ப 3 மினி லாரி லோடு சாண உரம், தவிர யூரியா, பொட்டாஷ் உரம் போடணும். குறைந்தது 6 தடவையாவது உரம் போடணும். ஏழுதடவை உரம் போடுறது ரொம்ப நல்லது. இரண்டு நாளுக்கு ஒரு தடவையாவது தண்ணீர் பாய்ச்சணும்.

ஆறாவது மாசத்துல பூ வரும் ஒன்பது முதல் பத்தாவது மாசத்துல காய் நல்லா பருமனானதும் குலையை வெட்டி எடுக்கலாம்.

நான் நேந்திரன் தோட்டத்தை பராமாரிக்கிற முறையைச் சொல்லிடுறேன்.

ஒரு வருஷம் வாழை நடுறது, உரம்வைக்கிற வேலைன்னு எடுத்துகிட்டா 84 ஆட்கள் வேலைக்குத் தேவைப்படுவாங்க. ஒரு வேலைக்காரருக்கு 650 ரூபாய் சம்பளம்னு வைச்சாலும் 84 வேலைக்காரங்களுக்கு கிட்டத்தட்ட 48 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குப் போயிடும். அப்புறம் முதலில் வாழைக்கன்று வாங்கிய வகையில் செலவு 5 ஆயிரம் ரூபாய், வாழை நடுவதற்குரிய மருந்து வாங்கிய வகையில் 1500 ரூபாய்; நில மேலாண்மை, உரச் செலவுன்னு 35 ஆயிரம் ரூபாய்; போக்குவரத்து, வாழைக்குலையை பாதுகாக்க ஒலைத்தடுக்கு இதர செலவுகள் 10500 என மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும். வாழைக்குலையை இப்போ கிலோ கணக்கில்தான் எடைக்கு எடுக்கிறாங்க. கிலோ கணக்கில்தான் எடைக்கு எடுக்கிறாங்க. கிலோ 25 முதல் 35 ரூபாய் வரை விலைக்குப்போகும். சராசரி கிலோ 25 ரூபாய்க்கு விலைக்குப் போகுதுன்னு வைச்சுப்போம். நாம நடுற ஆயிரம் வாழைகள்ல 900 வாழைகள்தான் பலன் தர வாய்ப்பு இருக்கு. 50 முதல் 100 வாழைகள் வரை கணக்கில எடுக்க வேண்டாம். ஒரு வாழைக்குலை ஏழு முதல் எட்டு கிலோ எடைகொண்டதாக கணக்கிடலாம். சராசரி எட்டுகிலோ காய் 25 ரூபாய் விலையில் கிட்டத்தட்ட 900 வாழைக்குலைகள் விலைக்குப்போனால் 1,80,000 ரூபாய் கிடைக்கும். நாம் கூறியபடி முதலில் சொன்ன ஒரு லட்சம் ரூபாய் செலவு போக 80 ஆயிரம் நமக்கு கிடைக்கும். அதில 40 ஆயிரம் குத்தகைக்கும் கொடுதோம்னா 40 ஆயிரம் ரூபாய் மிஞ்சும்.

இதுதவிர வாழை இலைகள், வாழைக்கன்று விற்பதிலும் கணிசமான லாபம் பார்க்கலாம்.

ஒரு முறை நிலம் மேலாண்மை செய்து வாழை நட்டு அந்த வருட இறுதியில் பலன் பெற்ற பின்னர், அந்த வயலை நன்கு பராமரித்து அதில் மரச்சீனி நட்டு விடுவேன். இதனால் மண்ணுக்கு அடியுரம் தேவை இல்லை. இரண்டு பயிர்களையும் மாறி மாறி நிலத்தில் நடுவதால் எனக்கு செலவு குறைவு, வருவாயும் கூடுதல் கிடைக்கும். பொதுவாக நாங்க கஷ்டப்பட்டு விவசாயம் செய்தாலும் வியாபாரிகள் மரச்சீனிக் கிழங்கு, வாழைப்பழம் விற்கும் விலையில் பாதிகூட எங்களுக்கு கிடைப்பது இல்லை என்பதே நிதர்சன உண்மை. ஆனால் சில சீசன்களில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபமும் உண்டு!” என்று சொல்லி முடித்தார்.

நன்றி

பொன்னப்பன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news