Skip to content

முட்டை அமிலம் தயாரிப்பு..!

முட்டை அமிலம் தேவையான பொருட்கள்:

5 முட்டை, 10-15 எலுமிச்சை பழங்களின் சாறு மற்றும் 250 கிராம் வெல்லம் .

தயாரிப்பு:
• முட்டையை ஜாடியில் போட்டு முற்றிலும் மூழ்கும் வரை எலுமிச்சை சாறு ஊற்ற வேண்டும்.
• பத்து நாட்கள் வரை மூடி வைக்கவும் . பத்து நாட்களுக்கு பிறகு முட்டையை உடைத்து கரைசல் தயார் செய்ய வேண்டும்.
• அடர்த்தியான வெல்லப் பாகை சம அளவு சேர்த்து பத்து நாட்களுக்கு வைத்து இருக்க வேண்டும்.
• கரைசல் தெளித்தலுக்கு தயாராகி விடும்.
• இது மீன் அமிலத்தைப் போன்று தாவரங்களுக்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்து மற்றும் தாவர வளர்ச்சியை அதிகரிக்கும்.

பயன்பாடு: ஒன்று முதல் இரண்டு மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீருடன் சேர்த்து தெளிக்கலாம்.

நன்றி

என். மதுபாலன், B.sc (Agri),

இயற்கை வேளாண்மை ஆலோசகர்,

தர்மபுரி.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

1 thought on “முட்டை அமிலம் தயாரிப்பு..!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj