Skip to content

3D உணவு அச்சு தொழில்நுட்பம்

VTT Technical Research Centre of Finland Ltd  விஞ்ஞானிகள் உணவு உற்பத்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்த புதிய 3d அச்சிட்டு முறையினை உருவாக்கியுள்ளனர். தற்போதுள்ள வேதியியல் உலகில் ஆரோக்கியமான உணவுகளை உருவாக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் தற்போது இருக்கும் உணவு முறைகள் அனைத்தும் உடலிற்கு தீங்கு விளைவிக்கும் விதத்தில் உள்ளது. தற்போது விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள 3d உணவு முன் மாதிரி முறை அதிக அளவு நன்மை பயக்கும் விதத்தில் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

3d உணவு முன் மாதிரி இரண்டு முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. இம்முறையில் உணவு பொருட்களை அதிக சுவையுடன் உருவாக்க தனித்துவமான mouthfeel உற்பத்தி முறையினை உருவாக்கியுள்ளனர். மேலும் இம்முறையில் மென்மையான ஜெல் கட்டமைப்பு அடுக்கு மூலம் உணவுப்பொருள் தயாரிக்கப்படுகிறது. 3D உணவு அச்சிடும் புதிய தொழில்நுட்பம் தீவிர ஆராய்ச்சி அடிப்படையில் விரைவாக வளர்ந்து வரும் தொழில்நுட்பமாகும். இம்முறையில் உணவு பொருட்களின் மூலப்பொருள்கள் அனைத்தும் ஒட்ட பண்புகள் மூலம் இணைக்கப்படுகிறது.

இதற்கு முன்பு 3D தொழில் நுட்பம், உணவு பதப்படுத்துதல், உபகரணங்கள், மென்பொருள்கள் ஆன்லைன் சேவைகளில் பயன்படுத்தப்பட்டது. தற்போது முதல் முறையாக 6 உலக அளவில் உணவினை அதிக சக்தியுடையதாக மாற்றும் புதிய 3D உணவு அச்சு தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

https://www.sciencedaily.com/releases/2016/05/160503072408.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj