Skip to content

கோதுமை பயிரினை பாதுகாக்க எதிர்ப்பு மரபணு

ஜான் இன்னெஸ் மையம் (இணை உளவு குழுவின்) மற்றும் Sainsbury ஆய்வக (TSL) விஞ்ஞானிகள் இணைந்து கோதுமை பயிருக்கு ஏற்படும் நோயினை பற்றி ஆய்வு செய்தனர். அவர்களுடைய ஆய்வுப்படி துல்லியமாக கோதுமை பயிருக்கு ஏற்படும் நோயினை குணப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கண்டறிந்துள்ளனர். அதில் மிக சிறந்தது எதிர்ப்பு மரபணுவாகும். எதிர்ப்பு மரபணு கோதுமை விளைச்சளை அதிகப்படுத்துகிறது. மேலும் இரசாயன பயன்பாடுகளை குறைக்கிறது. எதிர்ப்பு மரபணு தொற்று கிருமிபோல பயிரில் ஊடுருவி நோய் கிருமிகளை அழிக்கிறது. மேலும் இது  மஞ்சள் துரு நச்சுத்தன்மை மிக்க நோய்கிருமிகளுக்கு எதிராக பயனுள்ள பல எதிர்ப்பு மரபணுக்களை உருவாக்கி புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கோதுமை பயிரினை பாதுகாக்க உதவுகிறது. மேலும் விஞ்ஞானிகள் குளோன் முறையில் எதிர்ப்பு மரபணுக்களை உருவாக்குகின்றனர்.

எதிர்ப்பு மரபணுவுக்குள் காட்டு வகை கோதுமை தாவரங்களில் அதிக அளவு இருப்பதால் அதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் காணப்படுகிறது. காட்டு கோதுமை எதிர்ப்பு மரபணுக்கள் இரசாயன உரப்பயன்பாட்டை குறைக்க உதவுகிறது. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட எதிர் மரபணுக்கள் ஒரே ஒரு மரபணுவாக மாறி கோதுமையினை பாதுகாக்கிறது. இதுவரை சுமார் 124,000 எதிர் மரபணுக்கள் கண்டறியப்பட்டுள்ளது. எதிர்ப்பு மரபணுக்கள் SR22 மற்றும் SR45 என்ற முறையில் வரிசைப்படுத்தப்படுகிறது.

ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு இந்த எதிர்ப்பு மரபணுவிற்கு அங்கீகாரம் அளித்துள்ளது. மேற்கு நாடுகள் மற்றும் ஏழ்மை நாடுகளில் கோதுமை முக்கிய ஊட்டச்சத்து உணவாக உள்ளது. தற்போது 31 நாடுகளில் கோதுமை உற்பத்தி மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அங்கு துரு நோய் பாதிப்புகள் அதிகம் காணப்படுகிறது. இந்த பாதிப்புகளிலிருந்து விடுபட விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்த மரபணு பெரிதும் உதவும்.

https://www.sciencedaily.com/releases/2016/04/160425141541.htm

விளம்பரம்

உங்களுக்கான இணையதளம் தொடங்க வேண்டுமா?

உடனே தொடர்பு கொள்ளுங்கள்..

 hello@cloudsindia.in

சிறப்பான இணையதள சேவைக்கு

http://cloudsindia.in/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj