Skip to content

2050-ல் வறட்சியின் தாக்கத்தால் அதிகமாகும் உயிரிழப்புகள்!

தற்போது ஏற்பட்டிருக்கும் வறட்சியால் வரும் 2050-ல் சுமார் 500,000 மக்கள் உலக அளவில் கூடுதலாக இறப்பார்கள் என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது. இதற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உணவு உற்பத்தி பாதிப்பு. மேலும் இந்த காலநிலை மாற்றத்தால் சுகாதார பாதிப்பும் உலகம் முழுவதும் அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இதனை பற்றி ஆக்ஸ்போர்ட் மற்றும் UK பல்கலைக்கழகத்தின் டாக்டர் மார்கோ ஸ்பிரிங்மேன் தலைமையில் ஒரு ஆய்வு நடைப்பெற்றது. அவர்களுடைய ஆய்வுப்படி வரும் 2050-ல் 155 நாடுகள் கடும் வறட்சிக்கு ஆட்படப்போவதாக கூறப்படுகிறது. இந்த வறட்சியின் பாதிப்பால் காய்கறிகள் சாப்பிடுவது குறைந்து, இறைச்சி அதிக அளவு சாப்பிடுவார்கள்.

இதனால் மனிதர்களுக்கு இதயநோய், பக்கவாதம், புற்று நோய், போன்ற மரண நோய்கள் ஏற்படும் என்று டாக்டர் மார்கோ ஸ்பிரிங்மேன் கூறினார். வரும் 2050-ல் மனிதனுக்கு நாளொன்றுக்கு சுமார் 3.2% சராசரி உணவு கிடைக்கும் (அதவது 99 கலோரி) பழங்கள் மற்றும் 4.0% காய்கறி  (நாள் ஒன்றுக்கு 14.9g), மற்றும் 0.7% ஆக சிவப்பு இறைச்சி நுகர்வு (நாள் ஒன்றுக்கு 0.5g) மட்டுமே கிடைக்கும்.

மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் மேற்கு பசிபிக்பிராந்தியம் (264000 பேர் இறப்பு)  மற்றும் தென்கிழக்கு ஆசியா (164000) பகுதிகளிலும், சீனா (248000), இந்தியா (136000), கிரீஸ் 124 பேர், இத்தாலியில் 89 இவை மில்லியன் மக்கள் ஒன்றுக்கு கணக்கிடப்படும். இந்த காலநிலை மாற்றத்தால் உடல் பருமன் அளவு வெகுவாக குறையும். இந்த காலநிலை மாற்றத்தால் ஐரோப்பா (60%), கிழக்கு மத்தியதரைக்கடல் (42%) பேர், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் 47% பேர் இறப்பார்கள்.

http://www.sciencedaily.com/releases/2016/03/160302204506.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj