Skip to content

மண் வளத்தை அதிகரிக்கும் தோட்ட தாவரங்கள்

Soil Science Society of America (SSSA) விஞ்ஞானிகள் மண்ணை பாதுகாக்க புதிய முறையினை கையாண்டுள்ளனர். அந்த புதிய முறை என்னவென்றால் தோட்ட தாவரங்களை அதிக அளவு வளர்ப்பதால் மண் பாதுகாக்கப்படும் என்பதாகும். தோட்டக்கலை தாவரங்கள் குளிர்காலத்தில் மண்ணினை அதிக அளவு பாதுகாக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது தோட்ட தாவரங்களுக்கு இயற்கையான உரம் கிடைப்பதால் மண்ணினை நன்றாக வளம் ஆக்குகிறது. இந்த தோட்டக்கலை தாவரங்களின் எச்சங்கள் கீழ்வரும் நன்மைகளை மண்ணிற்கு வழங்குகிறது.

  • தாவர எச்சங்கள், மண் அரிப்பு மற்றும் மேல் மண் இழப்பினை குறைக்கிறது.
  • மண் மேற்பரப்பில் உள்ள தாவர எச்சங்கள் மண் உதிர்வினை தடுக்கிறது.
  • எஞ்சிய தாவர பொருள் உள்ளடக்கிய மண் நிழல் களைகளை குறைக்கிறது.
  • தாவர எச்சங்கள் வெப்பநிலையினை கட்டுப்படுத்தும், நிழல் கொடுக்கும்.
  • மண், வெப்பநிலையினை ஒரே சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இதனால் வசந்த காலத்தில் பயிர் வளர்ச்சி மற்றும் விதை முளைப்பதற்கு சாதகமாக மண் ஈரப்பதத்தினை வழங்குகிறது.
  • பயிர் எச்சங்களை பாதுகாப்பதன் மூலம் தாவர விதைகள் வளர்ச்சி அடைகிறது. இதனால் நன்மை தரும் மைக்ரோ-வாழ்விடங்கள் அதிகரிக்கிறது.
  • தாவர எச்சங்கள் ஆர்கானிக் பொருட்களை வழங்குகின்றன.

https://www.sciencedaily.com/releases/2016/02/160215124440.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj