Skip to content

கலப்பின விவசாயம் அதிக மகசூலினை தரும்

இன்றைய விவசாயத்தில் கலப்பின தாவரங்கள் மட்டுமே உணவு எரிபொருள், ஃபைபர் ஆகியவற்றை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கலப்பின பயிர்களில் குறிப்பாக சோளம் போன்ற தானிய பயிர்களில் அறுவடை இரண்டு மடங்கு அதிகரிக்கிறது. கலப்பின விதைகள் பயிரிட அதிக செலவாகும். இதனை ஈடுகட்ட 1930 ல் இரண்டு ரஷிய விஞ்ஞானிகள் இந்த செயல்முறையை எளிமைப்படுத்த F1 கலப்பு விதையினை அறிமுகப்படுத்தினர். இது அதிக அளவு நன்மையினை விவசாயிகளுக்கு பெற்று தந்தது. விஞ்ஞானிகள் அவகலப்பு கலப்பின தாவர பண்புகளை அடிப்படையாக கொண்டே திணை வகை பயிர்களை அதிக அளவு உற்பத்தி செய்தனர்.

தாவரங்களில் இந்த கலப்பினத்தினை பயன்படுத்துவதால் இரண்டு தலைமுறைகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். Apomictically இனப்பெருக்கம் என்ற கலப்பின தாவரங்கள் விரும்பிய உயிரியல் பண்புகளை வெளிப்படுத்துகின்றன என்பதை விஞ்ஞானிகள் நிருபித்துள்ளனர். இந்த பரிசோதனைகளை பொறுத்தவரை ஆராய்ச்சி குழு இயற்கை apomictic hawkweed (Hieracium pilosella) பயன்படுத்தி 11 புதிய கலப்பின விதைகளை இயற்கை குளோனிங் மூலம் உருவாக்கப்பட்டு, இரண்டு தலைமுறைகளுக்கு இனப்பெருக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கு 20 வேறுபட்ட பண்புகள் அளவிடப்படுகிறது. மேலும் அதை குளோனிங் முறையில் இரு தலைமுறைகளுக்கு பயன்படுத்தி சுற்றுச்சூழல் மற்றும் வெப்பநிலை, நீர், வெளிச்சம் போன்ற பல்வேறு காரணிகளை கொண்டு கிரீன்ஹவுஸில்  வளர்க்கப்படும்.

இந்த சிறப்பு இனப்பெருக்க முறை, பயிர்களுக்கு பயன்படுத்த முடியும் என்றால், அது F1  கலப்பின விதைகளின் உற்பத்தி செலவை குறைக்க உதவும்  என்று பேராசிரியர் உய்லி Grossniklaus கூறுகிறார். இப்போதெல்லாம், சிறிய விவசாயிகள் பொதுவாக அவர்களது சொந்த தனிப்பட்ட பயன்பாட்டிற்கு குறைவாக உற்பத்தி செய்கின்ற பயிர்களை பயன்படுத்துகின்றனர். Apomictic இனப்பெருக்கம்  அதிக உற்பத்தியினை கொடுக்கும். இருந்தாலும் ஹார்டி கலப்பு விதைகளை மிகவும் மலிவு விலையில் கொடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு  மகசூல் பாதிப்பு இல்லாமல் அடுத்த ஆண்டு விதைப்பதற்கு தற்போதைய அறுவடை விதைகள் உதவும். Grossniklaus கருத்துப்படி, பயிர்களின் உண்மையான பயன்பாடு பற்றி இன்னமும் விரிவாக சோதனை வேண்டும்.

http://www.sciencedaily.com/releases/2016/01/160128133028.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj