Skip to content

வேல மரம் மற்றும் அயிலை மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

வேல மரங்கள்

கரும்பழுப்புப் பேன்கள் வேல மரக்கிளைகள் மற்றும் தண்டுப் பகுதிகளைத் தாக்குகின்றன. கம்பளிப் புழுக்கள் இலைகளைத் தாக்குகின்றன. பசும்பொன் வண்டுகள் குறித்து இலைகளைச் சேதப்படுத்துகின்றன.

இலைத் துளைப்பான்

இலைத் துளைப்பானின் பூச்சியியல் பெயர் யுமினோச்டீரா டெட்ரோ கோர்டா ஆகும். இப்புழு இலைகளைத் துளைத்துச் சேதமுண்டாக்கும்.

தண்டு துளைப்பான்

தண்டு துளைப்பானின் பூச்சியியல் பெயர் சுசீரா காஃபியே ஆகும். இப்பூச்சி தண்டுகளைத் துளைத்துச் சேதமேற்படுத்தும்.

மரப்பட்டைப் புழு

மரப்பட்டைப்புழுவின் பெயர் இண்டார்பெலா குவாட்ரி நொட்டேட்டா ஆகும். வேல மரத்தின் பட்டைகளை இதன் புழுக்கள் அரித்துத் தின்னும்.

பைப் புழு

பைப்புழுவின் பூச்சியியல் பெயர் கிளேனியா கிரேமரி ஆகும், இப்புழு சிறு குச்சிகளை ஒன்றோடு ஒன்று இணைத்து பைபோல் செய்து அதனுள் புழுக்கள் காணப்படும். இலைகளைத் தின்று சேதமுண்டாக்கும்.

பைப்புழுக்களைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு 1 மி.லி. மானோகுரோடோபாஸ் மருந்து என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம். மாவுச் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த லெபாசிட் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். எலிகளைக் கொல்ல செல்பாஸ் மாத்திரைகளை 2 அல்லது 3 என்ற எண்ணிக்கையில் வளைகளில் போட்டு மூடி விட வேண்டும். வேர்க் கறையானைத் தடுக்க லிண்டேன் திரவ மருந்தை 1 லிட்டர் நீருக்கு 2 மி.லி. என்ற விகிதத்தில் கலந்து மரம் ஒன்றுக்கு 1 முதல் 2 லிட்டர் வரை ஊற்ற வேண்டும். தண்டு துளைப்பான்களைக் கட்டுப்படுத்த டெமக்ரான் அல்லது நுவக்ரான் போன்ற பூச்சிக் கொல்லி மருந்துகளை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி வீதம் கலந்து தெளிக்கலாம்.

அயிலை மரம்

லெபிடாப்டிரான் இனத்தைச் சேர்ந்த பூச்சிகளே அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றில் இலைபிணைக்கும் புழுக்களும், இலை கடிக்கும் புழுக்களும் முக்கியமானவையாகும். இலை பிணைக்கும் புழுக்களின் தாக்குதலினால் சுமார் 1 அல்லது 2 வருட மரங்கள் மடிந்து விடுகின்றன. வளந்த மரங்கள் நலிவுறுகின்றன. பூக்களும், விதைகளும் பூச்சியின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இவ்வினத்தின் வாழ்க்கைச் சுழற்சி 23 முதல் 33 நாட்களில் முடிகிறது. இலை கடிக்கும் புழுக்கள் செம்டம்பரிலிருந்து பிப்ரவரி மாதம் வரை அதிக அளவில் காணப்படுகின்றன. இந்தப் புழுக்களைக் கட்டுப்படுத்த 0.1 சதம் மானோலுரோட்டோபாஸ் அல்லது 0.125 சதம் அல்லது கார்பரில் 50 சதத்தூள் அல்லது 0.05 சதம் குயினால்பாஸ் அல்லது 2 சதம் வேப்ப எண்ணெய்யையும் தெளிக்க வேண்டும்.

                                                                                  நன்றி

                                                                    வேளாண் காடுகள்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj