Skip to content

பாசிகளில் மின்  சக்தி 

டொரண்டோ: இந்திய ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் உள்ள ஒரு குழு எதிர்காலத்தில் செல்போன்கள் மற்றும் கணினிகளுக்கு நீல பசும்பாசிகளிலிருந்து எடுக்கப்படும் மின் ஆற்றல் பயன்படும் என்று நீல பசும் பாசிகளில் ஒரு தொழில்நுட்பம் ஆராய்ச்சி செய்து வருகிறது.

2 (1)

இந்த ஆராய்ச்சி அணியினர் நீல பசும்பாசிகளின் சுவாசம் மற்றும் ஒளிசேர்க்கையிலிருந்து மின் ஆற்றலை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். தாவரங்களின் செல்களில் நடைபெறும் ஒளிச்சேர்க்கை மற்றும் சுவாசித்தல் நிகழ்வினால் எலக்ட்ரான் இடமாற்ற நிகழ்வு நடைபெறும். ஒளிச்சேர்க்கை மற்றும் சுவாசித்தலின் போது நீல பசும் பாசிகள் வெளியிடும் எலக்ட்ரான்கள் மூலம் இயற்கையாக மின் ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான முத்துக்குமரன் பக்கிரிசாமி கூறுகிறார்.

1 (1)

தற்போது, ஒளிச்சேர்க்கை செல்கள் சிறிய அளவில் உள்ளது, மற்றும் அவை ஒரு நேர்மின் முனை (ஆனோடு), ஒரு எதிர்மின் முனை (கேத்தோடு), புரோட்டான் பரிமாற்ற சவ்வு ஆகியவற்றை கொண்டுள்ளது. பாசிகள் முதலில் நேர்முனை அறையில் வைக்கப்படும். பிறகு அவை ஒளிச்சேர்க்கை மேற்கொள்ளும் போது மேற்பரப்பில் சயனோபாக்டீரியாக்கள் எலக்ட்ரான்களை விடுவிக்கிறது. அப்போது எலக்ட்ரானை பிரித்தெடுத்து மின்சக்தியை பெற அதனுடன் ஒரு சக்தி சாதனம் இணைக்கப்படுகிறது. இது எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

http://timesofindia.indiatimes.com/home/science/Algae-could-be-a-green-power-source/articleshow/49928729.cms

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj