Skip to content

கரும்புள்ளியால் தக்காளி சாகுபடி பாதிப்பு

தக்காளி செடிகளில் தற்போது அதிகமான பாதிப்பு, இலைகள் மற்றும் மலர்களில் ஏற்படுகிறது, இதற்கு என்ன காரணம் என்று Boyce Thompson Institute தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து பார்த்ததில் தக்காளி செடிகளில் ஏற்படும் கரும்புள்ளிகளுக்கு காரணம், குளிர்கால காலநிலை மற்றும் அதிகப்படியான கோடை மழையே என்று கண்டறிந்துள்ளனர். இதனால் தக்காளி செடிகளுக்கு விரைவாக பாக்டீரியா பாதிப்பு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

BTT தக்காளி ஆராய்ச்சியாளர்கள் தக்காளியில் உள்ள கரும்புள்ளியை பற்றி ஆய்வு செய்து பார்த்ததில் தற்போது நியூயார்க் மற்றும் பல உலக நாடுகளில் இதன் காரணமாக மகசூல் அதிக அளவிற்கு பாதிப்படைந்துள்ளது என்று தெரிவித்தனர்.

கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து நியூயார்க் தக்காளி வர்த்தகத்தில் இந்த கரும்புள்ளி பாக்டீரியாவின் பாதிப்பால் மகசூல் மிகவும் குறைந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். தக்காளி அதிகப்படியான நோய் எதிர்ப்பு சத்தினை கொண்டுள்ளதால் இதனை உலகில் உள்ள அனைத்து மக்களும் விரும்பி வாங்குகின்றனர். ஆனால் இந்த ஆண்டு மிக மோசமாக கரும்புள்ளி தாக்குதல் தக்காளியில் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

தக்காளியில் உள்ள கரும்புள்ளிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் நல்ல தரமான விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் மற்றும் அவர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் சுத்தமாக பயன்படுத்தினால் இந்த பாதிப்பினை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் இந்த பாதிப்பிலிருந்து தடுக்க ஒரே வழி Pseudomonas Syringae PV தக்காளி மரபணுவினை பயன்படுத்துவதே சிறந்தது என்று கூறினர். அதுமட்டுமல்லாது QRPH1 வகை மரபணு தக்காளி விதையினை பயன்படுத்தினால் அதிக மகசூல் பெற முடியும் என்று கூறுகின்றனர். இந்த விதையை பற்றி தற்போது ஆராய்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

http://www.sciencedaily.com/releases/2015/11/151109083422.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj