Skip to content

காட்டுக்கதலி அல்லது அரேசிகத்தின் மருத்துவக்குணம்

காட்டுக்கதலி அல்லது அரேசிகம் ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட தாவரம். இது வட அமெரிக்காவில் உள்ளது என்பதை கண்டு பிடித்துள்ளனர். இந்த தாவரமானது பாறைகளின் இடுக்கில் மற்றும் சாலை ஓரங்களில் வளர்ந்து வருகிறது. அதும ட்டுமல்லாது இந்த தாவரத்தை வட அமெரிக்காவில் விவசாயத்திற்கு பயன்படாத நிலங்களில் பயிரிடுகின்றனர். குறைவான சூரிய வெளிச்சம் உள்ள இடத்திலும் இந்த செடி நன்றாக வளரும்.

தற்போது உள்ள சூழ்நிலையில்  நகர் புறத்தில் உள்ள மக்களுக்கு இந்த  தாவரத்தின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. ஏனெனில் இந்த தாவரத்தினுடைய  மருத்துவக்குணம் பல்வேறு வகையான நோய்கள் குணமாவதற்கு மருந்தாக இருந்து வருகிறது.

இந்த தாவரம் 10 செ.மீ உயரம் வரை வளரும் மேலும் இது ஒரு வற்றாத மூலிகையாக இருந்து வருகிறது. இந்த தாவரத்தினுடைய  இலை மிகவும் அடர்த்தியாகவும், மெல்லிதாகவும் , 3-30 செ.மீ நீளமான கூர்முனையை கொண்டது. இந்த தாவரத்தில் மஞ்சள் நிற மகரந்தம் வெளியே ஓட்டிக் கொண்டுள்ளது. பொதுவாக இந்த தாவரத்தின் பூக்கள் மே முதல் செப்டம்பர் வரை பூக்கும்.

2 (2)

இந்த  காட்டுக்கதலி அல்லது அரேசிகம் தாவரம் இரண்டு வகையாக உள்ளது:

5

  1. பொதுவான தாவரம்
  2. சிறிய இலை கொண்ட தாவரம்.
  3. இந்த வகை தாவரங்கள் அதிகமாக கனடாவில்  வளர்கிறது. இந்த  தாவரத்தை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

உணவாக பயன்படுகிறது:

3 (1)

இந்த தாவரத்தின் சுவை சுவிஸ் சார்டின் சுவையை போல இருக்கும் என அனைத்து மக்களும் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாது இந்த தாவரத்தினுடைய விதையை  காய வைத்து அதை பொடியாக்கி ரொட்டி அல்லது அப்பத்திற்கு  கறி வகையாக பயன்படுத்தப்படுகிறது. குறைந்த செலவில் அதிகமான  தரமுள்ள புரதத்தை அளிக்கிறது. இந்த தாவரத்தில் மெக்னீசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி ,வைட்டமின் கே  அதிகமாக நிறைந்து உள்ளது.

மருத்துவ பயன்பாடு:

4 (1)

இந்த தாவரத்தின்  இலைகள்  நம் உடலில் உள்ள அதிகமான  வெப்பத்தை கட்டுப்படுத்தவும் ,  மூட்டுகள் வீக்கம், புண் தசைகளுக்கு,  புண் உள்ள இடத்திற்கு மேற்பூச்சாக பயன்படுகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கு லத்தீன் அமெரிக்கா போன்ற பல பகுதியில் ஒரு பொதுவான நாட்டுப்புற தீர்வாக பயன்படுகிறது.  இது தொண்டை புண் , இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, காசநோய், மற்றும் வாய் புண்களுக்கு சிகிச்சையளிப்பதில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

1 thought on “காட்டுக்கதலி அல்லது அரேசிகத்தின் மருத்துவக்குணம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj