நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில்

14
7961

கிராமங்களில் ஏழை விவசாயிகளுக்கு நாட்டுக்கோழிகள் அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை ஒரு பகுதியாக ஈட்டி கொடுக்கின்றனர். நாட்டுக் கோழிகள் கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் தீடிர் தேவைகளை நிறைவு செய்யும் ஆதாரமாகவும், நிலையான வருமானம் தரக்கூடியதாகவும், நெருக்கடி காலங்களில் கை கொடுப்பதற்காகவும் இருக்கின்றன. கிராம புறங்களின் வாழும் மக்களின் தேவையை நிறைவு செய்வதிலும் நாட்டுக்கோழி வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டு கோழிகள் வளர்ப்பதன் மூலம் தமது வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், இத்தொழில் உதவுகிறது. கஷ்டப்பட்டு கைக்கால் தேஞ்சு போகும் மனிதர்களுக்கு ஈஸியான வருமானம் பெற நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில் துணை நிற்கிறது.

     வீட்டில் இருந்த படியே மாதம் மாதம் வருமானம் பெற ஓர் அரியவாய்ப்பை இந்த தொழில் அளிக்கிறது. மேலும் நாட்டுக்கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது. சத்துக்கள் நிறைந்த நாட்டுக்கோழி இறைச்சிக்கு நாடெங்கும் அமோக வரவேற்பு உள்ளது. கிராம மக்களின் ஊட்டச்சத்து நிலைப்பாட்டையும் உறுதி செய்யும் தன்மை நாட்டுக்கோழிகள் இறைச்சிக்காவும், முட்டை உற்பத்தியாகவும், பல்வேறு ஆராய்ச்சியின் விளைவாகவும் உருவாக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் குறுகிய இடத்தில் அதிக லாபம் பெறலாம். எனவேதான் இந்த தொழில் நகரப்பகுதியிலும் வளர்ந்து வருகிறது. கிராமப்புற பெண்கள், வேலையில்லாத இளைஞர்கள், நலிந்த பிரிவினர், தொழில் செய்ய விரும்புவோர் இந்த தொழிலை தொடங்கி குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம்.

14 COMMENTS

  1. நாட்டு கோழி வளர்ப்புக்கு ஏதேனும் தமிழக அரசு மூலம் நிதி உதவி உண்டா எப்படி பெறுவது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here