Skip to content

எந்த உணவுப்பொருளை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா…?

வீட்டுல் ஒரு நிகழ்ச்சி வந்தால் விருந்தினரை கவனிக்க நல்ல உணவை சமைத்து கொடுப்பது அவசியம். அப்படி கவனிக்கும் ஆர்வத்தில் சமைக்கலாம் என்று உங்கள் உணவு பொருட்களை திறக்கும் போது அவை கெட்டு போயிருந்தால் எப்படி இருக்கும்? அதை தவிர்க்க டிப்ஸ் தேவை. வெளியூர் பயணங்களிலும், மலிவான விலையில் கிடைக்கின்றது என்றும் நிறைய வாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் நாம் பொருட்களை வாங்கி விடுகின்றோம்.

ஆனால் அதை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவு நம்முள் இருப்பதில்லை. உணவு பொருட்களை வாங்குவதை விட அவற்றை எப்படி பராமரிப்பது என்ற அறிவே மிகவும் தேவையானது. பூச்சி பிடித்த அல்லது காலாவதியான உணவுகளை ருசியாக சமைத்து கொடுப்பதால் நம் வீட்டு மக்களுக்கு நாம் விஷத்தை சமைத்து கொடுப்பது போன்றதாகும்.

சிலர் உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைத்தாலோ உறைய வைத்தாலோ போதுமானது என்று நினைத்து பல நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துகின்றனர். ஆனால் அதுவும் கெடுதியானது என்பதை அறிவதில்லை. குளிரூட்டப்பட்ட உணவேயானாலும் அதற்கும் சில விதிகள் உண்டு. குறிப்பிட்ட நாட்களுக்குள் அவற்றை பயன்படுத்தி விட வேண்டும். குளிர்சாதன பெட்டியை நிரப்புவதில் கவனம் கொள்ளாமல், அதில் வைக்கும் உணவுகளை சரியான நேரத்தில் பயன்படுத்தும் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.

இறைச்சி, கடல் உணவு போன்றவறை மிகவும் கவனாமக சமைக்க வேண்டும். அதோடு அவற்றை பாதுகாப்பதில் அதை விட கவனம் தேவை. அவற்றை வாங்கிய நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் உண்ண வேண்டும். இல்லையென்றால் உணவு விஷமாக மாறி பல்வேறு உபாதைகள் நேரும் என்பதை மறக்கக்கூடாது. அப்படி நாள் கடந்து விட்டால் கண்ணை மூடி கொண்டு தூக்கி வீச வேண்டும்.

இதோ இங்கே உங்களுக்காக உணவை வாங்கிய நாளிலிருந்து எத்தனை நாளுக்குள் பயன்படுத்த வேண்டும், எப்படி பாதுகாக்க வேண்டும் என்று டிப்ஸ் உள்ளது. இதை படித்து சுவையுடன் ஆரோக்கியத்தையும் உங்கள் வீட்டு நபர்களுக்கு கொடுங்கள்.

முட்டை

பச்சை முட்டை அதாவது சமைக்காத மெல்லிய ஓட்டைக் கொண்ட முட்டை தேதியிட்ட நாளிலிருந்து மூன்று அல்லது ஐந்து வாரங்களுக்கு வைத்திருக்க முடியும். வேகவைத்த கடினமான ஓட்டைக் கொண்ட முட்டையை ஒரு வாரத்திற்கு வைத்திருக்க முடியும். முட்டையை தண்ணீரில் போட்டால் அது மிதக்க கூடாது. அப்படி மிதந்தால் அது கெட்ட முட்டை. மற்றும் உடைக்கும் போது நாற்றம் ஏற்பட்டாலும் அது கெட்ட முட்டை எனவே அதை உண்ண கூடாது.

கோழி போன்ற பறவை உணவுகள்

ஒரு முழு கோழி இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் இரண்டு நாள் வரை வைத்து பயன்படுத்தலாம். அதையே உறையவைத்தால் ஒரு வருடத்திற்கு வைத்து பயன்படுத்தலாம். ஆனால் அதையே துண்டு போட்டு உறைய வைத்தால் ஒன்பது மாதத்திற்குள் பயன்படுத்த வேண்டும். சமைக்காத கோழி இறைச்சியை கழுவ கூடாது என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? ஏனெனில் அதில் இருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியாவானது மற்ற உணவுகளுக்கும், சமையல் தளத்திலும் பரவும் வாய்ப்புள்ளது. சூடு மட்டுமே இவ்வகை பாக்டீரியாக்களை அழிக்க முடியும். வெப்ப நிலை அளவில் 165 டிகிரி அளவிலான வெப்பநிலை கோழி இறைச்சிக்கான குறந்தபட்ச வெப்ப நிலையாகும்.

தரமான மீனை இரண்டு நாளுக்குள் உணவாக உண்ணலாம். கொழுப்பு அதிகம் உள்ள மீன், அதாவது கானாங்கொளுத்தி போன்ற மீன்களை மூன்று நாட்களுக்கு ஐஸில் உறைய வைத்து உண்ண ஏதுவானது. நண்டு, பெரிய வகை இறாலான சிங்கி இறால் போன்றவற்றை குளிர்சாதன பெட்டியில் இரண்டு நாட்களுக்கு அல்லது மூன்று மாதங்களுக்கு வைத்து பயன்படுத்தினால் நல்லது. கடல் சிப்பி, இறால் போன்றவற்றை குளிரூட்டப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் உண்ண வேண்டும்.

சீஸ் (பாலாடைக்கட்டி)

மிருதுவான மற்றும் ஈரப்பதம் கொண்ட சீஸை திறக்காமல் இரண்டு வாரங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம். கடினமான சீஸ் வகைகளை ஒரு வருடத்திற்கு வைத்து பயன்படுத்தலாம். மிருதுவான சீஸில் மோல்ட் இருந்தால், அதை தோசைக் கல்லில் போட்டால் போதும். அதுவே கடினமான சீஸில் மோல்டு இருந்தால், அந்த பகுதியை மட்டும் வெட்டிவிட்டு பின் பயன்படுத்தினால் போதுமானது.

பால், கீரீம் மற்றும் மற்ற பால் உணவுகள்

குளிர்சாதன பெட்டியில் வைத்த பாலை ஏழு நாட்களுக்குள் அருந்திவிட வேண்டும். பாலை கெடாமால் வைக்க அறையின் வெப்ப நிலையிலும், குளிர்சாதன பெட்டியின் கதவிலும் வைக்காமல் பார்த்து கொள்ளவும். பால் க்ரீமை உறைய வைத்தால் நான்கு மாதத்திற்குள்ளும் அப்படியே குளிர்சாதன பெட்டியில் வைத்தால் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள்ளும் பயன்படுத்தி விட வேண்டும். வெண்ணெயை உறைய வைத்தால் ஒன்பது மாதத்திற்குள்ளும் அப்படியே குளிசாதன பெட்டியில் வைத்தால் இரண்டு மாதத்திற்குள்ளும் பயன்படுத்த வேண்டும்.

உறைய வைத்த உணவுகள்

உங்கள் நேரத்தின் பயனை உணவை உறைய வைப்பதில் காட்டாதீர்கள். குளிர்சாதன பெட்டியின் உறைய வைக்கும் பெட்டியில் பல உணவுகளை திணிக்கக் கூடாது. மேலும் அப்பெட்டியின் உறை நிலை பூஜிய நிலையில் இருக்க வேண்டும். சரியான உறைநிலையில் உணவை பத்திரமாக பாதுகாக்க முடியும்.

பழங்கள்

புளிப்பு அதிகம் கொண்ட பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து இரண்டு வாரங்களுக்கோ அல்லது ஒரு மாதத்திற்கோ பயன்படுத்தலாம். தர்பூசணி, முலாம்பழம் போன்ற மெலன் வகை பழங்களை ஒரு வாரத்திற்கும், பெர்ரி மற்றும் செர்ரி பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்த மூன்று நாட்களுக்குள்ளும் உண்ண வேண்டும். ஆனால் பழங்களை குளிரூட்டி பாதுகாப்பதால் அதன் ஈரதன்மை போகக்கூடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

காய்கறிகள்

வேர் காய்களான பீட்ஸ், காரட் போன்ற காய்களை குளிர் சாதன பெட்டியில் வைத்தால் இரண்டு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். அதுவே வெள்ளரி, மிளகாய், மிளகு, தக்காளி போன்ற வற்றை ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். சோளம், காளான் போன்ற மிருதுவான காய்களை குளிர்சாதன பெட்டியில் வைத்த நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குள் உண்ண வேண்டும்.

பானங்கள்

மூடி திறக்கப்படாத ப்ரஷ் ஜூஸ்களை மூன்று வாரத்திற்குள் அருந்த வேண்டும் அதற்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாது. அதை உறையவத்தால் 12 மாதத்திற்குள் பயன் படுத்த வேண்டும். சாதாரண சோடாவை ஒன்பது மாதத்திற்குள் பயன்படுத்த வேண்டும் அதுவே டயட் சோடாவெனில் நான்கு மாதத்திற்குள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்த வேண்டும். குளிர்சாதன பெட்டியில் அதிக நாட்கள் வைத்தால் அதன் செயற்கை இனிப்பு காலாவதி ஆகிவிடும்.

சமையலுக்கு பயன்படும் எண்ணெய்

காய்கறி எண்ணெய், ஆலிவ் ஆயில் போன்றவை கெட்டு போகக் கூடும் என்ற அதிர்ச்சி தகவலை நீங்கள் அறிவீர்களா? காலாவதி ஆகிவிட்ட எண்ணெய்கள் உடலுக்கு தீங்கி விளைவிக்கும் என்பது முற்றிலும் உண்மையே. மூடி திறக்கப்படாத எண்ணெயை ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம். திறந்து பயன்படுத்த ஆரம்பித்தால் நான்கு அல்லது ஆறு மாதத்திற்குள் பயன்படுத்தி விட வேண்டும். எண்ணெயை வெப்பநிலை இல்லாத, இருட்டான பகுதியில் வைத்தாலோ அடுப்பின் மீதோ டிஷ் வாஷர் வைக்கும் இடத்தின் மீது வைக்காமல் இருந்தாலோ எண்ணெயின் நல்ல தன்மை குறையாமல் பார்த்து கொள்ள முடியும்.

மசாலா வகைகள்

நன்றாக அரைக்கப் பட்ட மசாலா வகைகளை மூன்று வருடத்திற்குள் பயன்படுத்த வேண்டும். தாளிக்க மற்றும் அலங்கரிக்க பயன்படுத்தும் மசாலா பொருட்களை இரண்டு வருடத்திற்குள் பயன்படுத்த வேண்டும். முழு மாசாலா பொருட்கள் மற்றும் விதைகளை நான்கு வருடத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். நீங்கள் மசாலா பொருட்களை வாங்கிய உடன் அதை கையில் வைத்து நசுக்கி பாருங்கள். வாசனை வந்தால் தரமானது இல்லையின்றால் தரம் அற்றது என்பதை உணர முடியும்.

சாஸ், ஜாம் வகைகள்

இவ்வகை பாட்டில் உணவுகளை பயன்படுத்தினால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவற்றை பிரித்த உடன் குளிர்சாதன பெட்டியில் வைத்து ஆறு மாதத்திற்குள் பயன்படுத்த வேண்டும். தேன், ஜாம், சிரப் போன்றவற்றை குளிர செய்து எட்டு மாதத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.

2 thoughts on “எந்த உணவுப்பொருளை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா…?”

  1. மிகவும் பயன் உள்ள அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj