Skip to content

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் மரங்களின் பங்கு

1910 ஆம் ஆண்டு நம் நாட்டில் 40 சதம் காடாக இருந்த அளவு தற்போது 23 சதமாகக் குறைந்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரம் சீரிய முறையில் செயல்பட அதன் காடுகள் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு இருக்க வேண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளதால் சமவெளிப் பகுதிகளில் 20 சதமும், மலைப்பகுதிகளில் 60 சதமும் காடுகள் உயரவேண்டுமென 1952ல் முடிவெடுக்கப்பட்டு, அதற்கான வழிமுறைகளும் வரையறுக்கப்பட்டன. ஆனால் 55 ஆண்டுகளுக்குப் பின்னரும் காடுகளின் பங்கு 22 சதம்தான் உள்ளது. காடுகளை அழிப்பதால் கரியமில வாயு வளிமண்டலத்தில் அதிக அளவு சேர்கிறது. இது பல்வேறு தீங்கான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

       இதன் விளைவுகள்

  • அதிக மழை அல்லது வறட்சியால் பயிர் விளைச்சல் பாதிக்கப்படும்.
  • குளிர் பிரதேசங்களில் பயிர்களின் வளர்ச்சிப் பருவம் அதிகரிக்கின்றது.
  • பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • அதிக வெப்பம் காரணமாக மண்ணில் அங்ககப் பொருட்களின் சிதைவு துரிதப்பட்டு இதன் அளவு குறைய வாய்ப்புள்ளது.
  • கரியமில வாயு அதிகரிப்பதால் உற்பத்தித் திறன் அதிகரித்து பயிர்கள் அதிக அளவு சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளும். இதனால் மண்வளம் குறையலாம்.
  • பூமி வெப்பமடைவதால் கொசுவின் வாழ்நாள் மற்றும் இனவிருத்தியின் அளவு அதிகரிக்கிறது. இதனால் மலேரியா பரவுகின்றது.
  • பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் வளர்வதற்கு உகந்த நிலை ஏற்படுதல் விளைபொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் சேதமடைகின்றன.
  • வளிமண்டலத்தின் ஓசோன் படலம் சிதைவதால் தோல் புற்றுநோய்கள் அதிகம் ஏற்படும்.
  • அதிக வெப்பத்தால் பனிக்கட்டிகள் உருகும் நீரினால் கடல்மட்டம் அதிகரிக்கிறது. இது தொடர்ந்தால் மாலத்தீவும், வங்கதேசமும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. கடலோரப் பகுதிகளில் உப்புநீர் உட்புகுவதால் நிலத்தடி நீர் உவர்ப்புத் தன்மையாக மாறும்.

விளைவுகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்

  • பெட்ரோலிய எரிபொருட்கள் உபயோகிப்பதன் அளவைக் குறைக்க வேண்டும்.
  • இயற்கைச் சக்தியைத் திறம்பட உபயோகித்துக் கரியமில வாயு வெளியாகும் அளவைக் குறைக்கலாம்.
  • காடுகள் அழிவதை முழுவதுமாகத் தடுக்க வேண்டும்.
  • இயற்கை உரங்களைப் பயன்படுத்தவும், மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைக்கவும், நிலக்கரி எரித்தலைத் தடை செய்யவும் குறைந்த அளவு முன்னேற்றமடைந்த நாடுகள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
  • வளர்ச்சியடைந்த நாடுகள் சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்காத இரசாயனப் பொருட்களைப் பற்றிய தொழில்நுட்பங்களைப் பிற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

1 thought on “சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் மரங்களின் பங்கு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj